
Coolie movie Update: ரஜினி படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசையில் தத்தளித்து வரும் சினிமா துறையில், தற்போது அவரோடு நடிக்கும் வாய்ப்பை தெலுங்கு நடிகர் ஒருவர் மறுத்துள்ளது ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.
பிசியாக இருக்கும் ரஜினிகாந்த்:
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த், 73 வயதாகும் வயதிலும் பல படங்களில் நடித்து வருவதுடன், அந்த படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தும் வருகின்றது. கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கு வரவுள்ளது. இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் கமிட் ஆன படம் திரைப்படம் ‘கூலி’. இது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படமாகும். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், மேலும் படத்திற்கு வழங்கப் போல அனிருத் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கூலி படப்பிடிப்பு:
இதனிடையே கூலி படத்தின் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானதுடன், டிரெண்ட் ஆகி வைரலானது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த், தனது பழைய படத்தில் பேசிய ஒரு வசனம் இடம்பெற்று இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்தது. அது மட்டுமன்றி, இந்த டீசர் மூலம் இது ஒரு கேங்ஸ்டர் டிராமா படமாக இருக்கும் என்றும் கணிக்க முடிகிறது. இந்த டீசரை அடுத்து, தற்போது படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
கூலி நடிகர் - நடிகைகள்:
ரஜினியை தவிர இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், ஃபகத் ஃபாசில், மகேந்திரன் போன்றவர்கள் நடிக்கின்றனர். மேலும் இந்த கதை பான் இந்தியா படமாக உருவாகிறது. அதுடன் தற்போது இந்த படத்திற்கான வில்லன் கதாபாத்திரத்திற்காக ஆர்ட்டிஸ்ட் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினியுடன் நடிக்க மறுத்த மாஸ் ஹீரோ:
இந்நிலையில் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு நாகர்ஜுனாவை கேட்டதாகவும், அதற்கு நடிகர் நாகர்ஜுனா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்ப்பார் கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ