)
'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டிவிவி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் பான் இந்திய படமாக உருவாகும் சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் எப்படி இருப்பார் என்பது வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் இதுவரை வெளியிட்ட போஸ்டர்களில் நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர். ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர் என்றும், மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும் தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
Sunday to Friday
— Nani (@NameisNani) July 4, 2024
Violence ki insurance :)
‘Surya’#SaripodhaaSanivaaram pic.twitter.com/bijJo9RkwL
இந்த போஸ்டரில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நம் பக்கத்து வீட்டு பையனை போலவும், வசீகரிக்கும் புன்னகையுடன் உள்ளார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளில் சூர்யா எப்படி இருந்தார் என்பதற்கு நேர் மாறாக அவரது இந்த தோற்றம் உள்ளது. இதன் மூலம் இந்த தனித்துவமான கதாபாத்திரம் வெவ்வேறு வகையான தோற்றங்களை கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.
டிவிவி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
நடிகர்கள்
நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார்.
தொழில்நுட்பக் குழு
எழுத்து & இயக்கம் : விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள் : டி வி வி தனய்யா & கல்யாண் தாசரி
தயாரிப்பு நிறுவனம் : டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி. ஜி
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
சண்டை பயிற்சி இயக்குநர் : ராம்- லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : வால்ஸ் & ட்ரெண்ட்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ