சிவகார்த்திகேயன் வெளியிட்ட ''டீச்சர்' புகைப்படம்!

நடிகரகாக ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ட்விட்டரில் புதிய புகைப்படம் வெளியிட்டுள்ளார்!

Updated: Jun 19, 2018, 04:01 PM IST
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ''டீச்சர்' புகைப்படம்!

நடிகர் சிவகார்திகேயன், ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் கிடைத்த மக்களின் ஆதரவால் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 

இந்நிலையில், இன்று ரஜினி, விஜய்க்கு பிறகு அதிக குடும்ப ரசிகர்களை கொண்டு முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர், படங்கள் என்றாலே விரும்பி போகும் நிலைக்கு அவர் வளர்ந்துவிட்டார், சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தார்.

இதையடுத்து, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகும் கோலமாவு கோகிலா திரைப்படம். இப்படத்தின் இரண்டவாது பாடலான "கல்யாண வயசு" எனும் பாடலினை எழுதியது இவர் தான் என்று இணணயத்தில் வைரலாகி வருகின்றது.  

இந்நிலையில், இவர் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய ஆசிரியை சந்தித்து பேசியுள்ளார். இவரை பார்த்த ஆசிரியர் மிகவும் பெருமை அடைந்துள்ளார். அதன் புகைபடத்தை சிவகார்திகேயன் தற்போது தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.