வேலைக்காரன் பிஸினஸ் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி!!

Last Updated : Jul 13, 2017, 01:17 PM IST
வேலைக்காரன் பிஸினஸ் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி!!  title=

சிவகார்த்திகேயன் படத்திற்கு மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அவர் நடித்துள்ள வேலைக்காரன் படம் ரூ.11 கோடிகளுக்கும் மேல் வியாபாரமாகியுள்ளது

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தற்பொழுது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தொடங்கியுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.11 கோடி வரை விற்பனை ஆகும் என்று தகவல் வந்துள்ளன. 

இதுவரை முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களே ரூ.10 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் படம் ரூ.10 கோடிகளுக்கு மேல் வியாபாரம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே, வேலைக்காரன்! படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி அதிக பொருட்செலவில் வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News