கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!

கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 24, 2022, 03:16 PM IST
  • கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
  • விக்ரம் படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • விக்ரம் படம் குறித்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.
கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்! title=

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் விக்ரம். கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் காயத்ரி ஷங்கர் மற்றும் ஷிவானி நாராயணனும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு க்ரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் சிறு வயதில் தோன்றுவதுபோல காட்சிகள் உள்ளதாகவும் இதனை தொழில்நுட்ப உதவியுடன் படக்குழு வித்தியாசமாகச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரஜினியின் இடத்தில் விஜய்- பின்னணியில் கமல்ஹாசன்?! கசிந்த புதிய தகவல் இதோ!

                                                   Vikram film

இதனால் இப்படத்துக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்களாம்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர்களது போர்சன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நன்றி சொன்ன ‘காத்துவாக்குல’ டீம் - ரணகளத்திலும் குதூகலம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News