சூரரைப் போற்று டீசர் மாலை 5 மணிக்கு.. கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்

‘சூரரைப் போற்று’ படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2020, 09:42 AM IST
சூரரைப் போற்று டீசர் மாலை 5 மணிக்கு.. கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள் title=

சென்னை: சூரரைப் போற்று (Soorarai Pottru) படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் #SooraraiPottruTeaserFromToday என்ற ஹெஷ்டேக்கை டிரண்டிங் செய்து வருகின்றனர்.

‘சூரரைப் போற்று’ படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவராசியமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக அபரணா பாலமுரளி மற்றும் இவர்களுடன் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சூரரைப் போற்று படத்தை நடிகர் சூர்யாவின் நிறுவனமான 2D எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தநிலையில், இன்று ‘சூரரைப் போற்று’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News