வானவில்லாய் வந்து வாழ்வை வண்ணமயமாக்கினாய் .. மீனாவின் திருமண நினைவுகள்.!

நடிகை மீனாவின் கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு திருமண நாள் அன்று மீனா பதிவிட்ட இன்ஸ்டா பதிவு இன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Jun 29, 2022, 12:35 PM IST
  • மீனாவின் கணவர் உயிரிழப்பு
  • வைரலாகும் மீனாவின் இன்ஸ்டா பதிவு
  • பிரபலங்கள் பலரும் இரங்கல்
வானவில்லாய் வந்து வாழ்வை வண்ணமயமாக்கினாய் .. மீனாவின் திருமண நினைவுகள்.! title=

வானவில்போல வந்து வாழ்வை வண்ணமயமாக்கினாய் என நடிகை மீனா தனது கணவருக்கு எழுதிய வரிகள் இன்று வர்ணம் இழந்து நிற்கிறது. 1990ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மீனா மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். 

சிறந்த நடிகைகள் என குறிப்பிடப்படும் பட்டியலில் மீனாவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். திரையுலகில் கொடிகட்டி பறந்த மீனா கடந்த 2009ஆம் ஆண்டு  ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இருவரின் திருமண வாழ்கையும் மிக அற்புதமாக சென்ற நிலையில் நைனிகா என்ற மகளும் பிறந்தார். நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நைனிகாவை நடிகை மீனா திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். 

மேலும் படிக்க | இயக்குநர் மிஷ்கினின் புது அவதாரம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்திருந்தாலும் திருமணத்திற்கு பின்பு நடிகை மீனா தனது கணவர் மற்றும் மகள் ஆகியோருடனேயே தனது வாழ்கையை மிக எளிதாக மகிழ்ச்சியோடு கடத்தி வந்துள்ளார். இதற்கு இடையேதான் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட வித்யா சாகருக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு சிகிச்சை பெற்று வந்த வித்யா சாகருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதித்துள்ளது. 

meena

இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்யாசாகருக்கு புறாவின் எச்சத்தால் காற்றில் பரவும் ஒருவரை கிருமியின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளும், சிகிச்சைகளும் வித்யாசாகருக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு இடையே உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி தங்களில் 13ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாட இருந்த மீனாவின் கடந்த ஆண்டு திருமண நாள் இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில் என் வாழ்வில் வானவில்போல வந்து வண்ணமயமாக்கினாய் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் ஆழ்ந்த சோகத்துடன் வித்யாசாகரின் உயிரிழப்பிற்கு இறங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ஷாரூக்கானின் ஜவான் படத்தை வாங்கிய பிரபல ஓடிடி - இத்தனை கோடிகளா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News