அடங்காத அசுரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ராயன் அப்டேட் வெளியீடு

Dhanush Raayan Movie Update: தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படத்தின் முதல் பாடலுக்கு 'அடங்காத அசுரன்' பெயர் சூட்டப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2024, 10:16 AM IST
  • அடங்காத அசுரன் பாடல்.
  • ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.
  • இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் மே 9 ஆம் தேதி ரிலீஸ்.
அடங்காத அசுரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ராயன் அப்டேட் வெளியீடு title=

Dhanush Raayan Movie Update: தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' படத்தின் முதல் சிங்கிள் 'அடங்காத அசுரன்' நாளை அதாவது மே 9 ஆம் தேதி வெளியாகிறது.

ராயன் திரைப்படம் :
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் திறமை மிகு கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ (Dhanush Raayan Movie) என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை தனுஷ் இயக்கி அவரே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், உஷாரா விஜயன், அபர்ணா முரளி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.

மேலும் படிக்க | நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!

அடங்காத அசுரன் பாடல்:
இந்நிலையில் இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனிடையே தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் மே 9 ஆம் தேதி அதாவது நாளை ரிலீசாகவுள்ளதாக நேற்றைய தினம் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் அடங்காத அசுரன் என்று இந்தப் பாடல் துவங்கவுள்ளதாக தற்போது ஏஆர் ரஹ்மான், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் :
இதினிடையே தற்போது நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (Nilavukku Enmel Ennadi Kobam) என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனிடையே தான் கமிட் செய்தபடி சேகர் கம்முலா இயக்கத்தில் அடுத்ததாக டி51 படத்தில் (D51) தற்போது நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணைய உள்ளார் தனுஷ்.

மேலும் படிக்க | மகாமுனி இயக்குனரின் அடுத்த படம்! மே 10ம் தேதி வெளியாகும் ரசவாதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News