‘Common Man’ என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் : AGR RIGHT FILMS

காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு, Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2021, 10:54 AM IST
‘Common Man’ என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் : AGR RIGHT FILMS title=

காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.  ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்துள்ளது.

அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே "COMMON MAN" என்கிற தலைப்பு திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக AGR RIGHT FILMS தெரிவித்துள்ளது.

சிறிது நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் இதே போல "COMMON MAN" என்று ஒரு பட வேலையை முன்னெடுக்க அதன் பின்னர் விஷால் தன் படத்தலைப்பை மாற்றிக் கொண்டார். 

தற்போது CHENDUR FILMS INTERNATIONAL "COMMON MAN" என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம், AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லவே, சசிகுமார் எதுவானாலும் FILM CHAMBER வழியாக தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS, FILM CHAMBER-ஐ அணுகவே, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.  தயாரிப்பாளர் சங்கமும் இந்த தலைப்பை CHENDUR FILMS INTERNATIONAL-க்கு தவறுதலாக வழங்கிவிட்டதாக பதிலளித்துள்ளது.  

ALSO READ | இது வலிமை படத்தின் வேற மாதிரி அப்டேட்: சூடு பிடிக்கும் பட ரிலீஸ்

இதை எழுத்து பூர்வமாக ஒப்புதல் சான்றாக AGR RIGHT FILMS தயாரிப்பாளர் சங்கத்திடம் கேட்க தயாரிப்பாளர் சங்கமும் தருகிறோம் என்று பல நாட்களை கடத்தியுள்ளது.  இப்படி AGR RIGHT FILMS காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாக்காத வண்ணம் CHENDUR FILMS INTERNATIONAL "COMMON MAN" என்கிற தலைப்பில் பட டீசர் வெளியிட்டுவிட்டது.

இதன் பிறகு AGR RIGHT FILMS, சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.

தற்போது AGR RIGHT FILMS "COMMON MAN" என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் என CHENDUR FILMS INTERNATIONAL-லிடமும், இந்த தலைப்பில் வெளியான டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி விடுமாறு Think music நிறுவனத்திடமும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிசான்று வழங்கக் கூடாது என்று Censor Board-இடமும் சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியுள்ளது.

ALSO READ | Merry Christmas திரைப்படத்தில் காத்ரீனா கைஃபுடன் இணையும் விஜய் சேதுபதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News