யூடியூப்பில் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்

வெளியிடப்பட்ட விநாடியில் இருந்து செம ஹிட்டடிக்கிறது Valimai மோஷன் போஸ்டர். #Valimai, #MostLikedIndianMPValimai ஆகிய ஹேஷ்டேக்குகள் தற்போது இணையம் முழுவதும் வைரலாகின்றன

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 12, 2021, 05:36 PM IST
  • லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்து ஹிட்டடித்தது வலிமை போஸ்டர்
  • மில்லியனுக்கும் அதிகமானவர்கள் யூடியூபில் பார்த்து ரசித்தனர்
  • இன்னும் பல சாதனைகளை செய்ய வலுவாய் தடம் பதிக்கிறது வலிமை
யூடியூப்பில் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த அஜித்தின் வலிமை மோஷன் போஸ்டர்

அஜித்தின் வலிமையின் முதல் தோற்றத்தின் போஸ்டர்கள் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட விநாடியில் இருந்து செம ஹிட்டடிக்கிறது Valimai மோஷன் போஸ்டர்.

#Valimai, #MostLikedIndianMPValimai ஆகிய ஹேஷ்டேக்குகள் தற்போது இணையம் முழுவதும் வைரலாகின்றன. MotionPosterMotionPoster தளம் பலரால் பார்க்கப்படுகிறது.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் அட்டகாசமாய் இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு பின் வெளியானாலும், சூப்பராய் இருக்கும் போஸ்டர் அஜித்தின் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்திருக்கிறார் தல…

இந்த போஸ்டரை பார்க்குக்ம்போது கெட்டவர்களின் கூட்டத்தினருக்கு எதிராக அஜித்தின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது தெரிகிறது. ‘சக்தி என்பது மனதின் நிலை’(Power is state of mind) என்று பஞ்ச் டயாலாகும் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. 

1.23 வினாடிகள் கொண்ட வலிமை மோஷன் போஸ்டர் வீடியோ, பைக்கில் ரெய்ட் செய்யும் அஜித்தை காட்டுகிறது. படம் 2021 இல் வெளியாகும் என்று மட்டுமே தெரிவித்திருக்கும் படக்குழு, வெளியீட்டு தேதியை மட்டும் வெளியிடவில்லை. ஆனால், வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் வந்து ஹிட்டடித்தது வலிமை போஸ்டர். இதை சமூக ஊடகங்களில் பலரும் பார்த்து ரசித்து வருகின்ரானர். வெளியாகிய சில மணி நேரத்திலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் யூடியூபில் பார்த்து ரசித்தனர்.

இதுபோல இன்னும் பல சாதனைகளை செய்ய வலுவாய் தடம் பதிக்கிறது வலிமை திரைப்படம். தல அஜித்தின் தலையாய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் வலிமை என்பதை அதன் மோஷன் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பே தெரிவிக்கிறது.

போனி கபூர் தயாரிக்கும் வலிமை திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்கள். 

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என அஜித் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பார்ப்பை பல்வேறு விதங்களிலும் வெளிப்படுத்தி வந்தனர்.

ALSO READ | Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News