விக்னேஷ் சிவனுக்கு அஜித்திடம் இருந்து பறந்து சென்ற ஆர்டர்

ஏகே 62 படத்தில் இடம்பெற வேண்டிய டையலாக்குகள் குறித்து கடுமையான ஆர்டர் ஒன்றை பாஸ் செய்திருக்கிறாராம் அஜித்  

Written by - S.Karthikeyan | Last Updated : May 25, 2022, 07:15 PM IST
  • அஜித்குமார் பாஸ் செய்திருக்கும் ஆர்டர்
  • விக்னேஷ் சிவன் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்
  • அக்டோபர் மாதம் சூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்
விக்னேஷ் சிவனுக்கு அஜித்திடம் இருந்து பறந்து சென்ற ஆர்டர் title=

ஹெச். வினோத் இயக்கித்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ஏகே 61 படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அஜித். வலிமை படம் முடிந்தவுடன் மீண்டும் ஹெச்.வினோத் கூட்டணியை உறுதி செய்த அஜித், அந்தப் படத்தினை வேகமாக முடிக்கும் வகையில் முழுவீச்சில் அந்தப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, ஹெச்.வினோத் படத்தின் சூட்டிங் முடிவதற்குள் அடுத்த படத்தினையும் ஒகே செய்திருக்கிறார். ஆம், ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | பிரேமம் பட இயக்குனரின் லட்சியம் இதுதானாம்!

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட நிலையில், இந்தப் படத்தின் கதை குறித்தும் டையலாக் குறித்து புதிய அப்டேட் ரிலீஸாகி இருக்கிறது. இந்தப் விவசாயிகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தை மேற்கொள்ளும் கதாநாயகன் தரமான உணவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்காக பாரம்பரிய முறைப்படி அனைத்து உழவு பணிகளை மேற்கொண்டு பயிர்களை விளைவிப்பாராம். 

இதில் விவசாயம் மற்றும் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் பிஸ்னஸாக மாறி தரம்கெட்டதாக மாறிவிட்டதையெல்லாம் படத்தில் சொல்லப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, கார்ப்பரேட்டுகளையும், இது சார்ந்த பிஸ்னஸ் மாடலையும் விமர்சிக்கும் வகையில் படத்தில் வசனம் இடம்பெற இருப்பதாக தெரிகிறது. இதில் தான் அஜித் ஒரு ஆர்டரை இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு போட்டுள்ளாராம். அதாவது, எந்தவகையில் அரசியல் சார்ந்த வசனங்கள் படத்தில் இடம்பெறக்கூடாது என்பதை சொல்லியிருக்கிறாராம். கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான வசனங்கள் இடம்பெறும்போது மறைமுகமாகக் கூட அரசியல் விமர்சிக்கப்பட வாய்ப்புள்ளதால், அதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளாராம். 

மேலும் படிக்க | ’தவிடன்’ கேரக்டரை வெளியிட்ட புகழ்

அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ஏகே 62 திரைப்படம் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு சூட்டிங் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திருமண வேலைகளில் பிஸியாக உள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுக்கும் அவருக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News