‘நம்மிடமிருந்து ஒரு இனிமையான மனிதரை இந்த நோய் பறித்து விட்டது’: SPB-ஐ நினைவு கூர்ந்த Amitabh Bachchan!!

SPB பல திறமைகளைக் கொண்டிருந்த போதும், பல சாதனைகளை செய்திருந்தபோதும், SPB மிகவும் எளிமையான, இனிமையான நபராக இருந்தார் என அமிதாப் பச்சன் குறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2020, 08:18 PM IST
  • எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
  • SPB 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
  • பாடும் நிலா பாலு மறைந்ததிலிருந்து பலரும் அவரைப் பற்றி புகழாரம் சூட்டி வருகின்றனர்.
‘நம்மிடமிருந்து ஒரு இனிமையான மனிதரை இந்த நோய் பறித்து விட்டது’: SPB-ஐ நினைவு கூர்ந்த Amitabh Bachchan!! title=

புதுடெல்லி: மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அஞ்சலி செலுத்தியுள்ளார். பல திறமைகளைக் கொண்டிருந்த போதும், பல சாதனைகளை செய்திருந்தபோதும், SPB மிகவும் எளிமையான, இனிமையான நபராக இருந்தார் என அமிதாப் பச்சன் குறியுள்ளார். 74 வயதான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyam) இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுடன் போராடி வெள்ளிக்கிழமை இறந்தார்.

பாலசுப்பிரமணியம் மிகவும் மென்மையான நபர்:

அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) சனிக்கிழமையன்று தனது வலைப்பதிவில், SPB-யின் குரலில் கடவுளின் ஆசீர்வாதம் இருப்பதாகக் கூறினார்.

அவர், “வேலைக்கு இடையில், மீண்டும் மீண்டும் நம்மை விட்டுச் சென்ற பாலசுப்பிரமணியத்தை நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடவுள் கொடுத்த அவரது குரல் இப்போது அமைதியடைந்துள்ளது. கடந்த பல நாட்களில், நமது பல மிக நல்ல தோழர்கள் நம்மை விட்டு சென்றுவிட்டார்கள். இந்த உலகை விட மேன்மையான ஒரு இடத்திற்கு அவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள் போலும். இந்த தொற்றுநோய் மற்றொரு ரத்தினத்தை நம்மிடமிருந்து பறித்து விட்டது. நம்மிடமிருந்து ஒரு இனிமையான, அன்பான குரலை இந்த நோய் எடுத்துச் சென்று விட்டது” என்று எழுதினார்.

ALSO READ: Miss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ!!

தேசிய விருதுகளால் அலங்கரிக்கப்பட்டார்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஐம்பது ஆண்டுகால தனது இசை வாழ்க்கையில், 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் ஆறு தேசிய விருதுகளை (Nationa Awards) வென்றுள்ளார். அவருக்கு 2001 ல் பத்மஸ்ரீ, 2011 ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 77 வயதான பச்சன் இருவரின் படத்தையும் பகிர்ந்து, 'பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல சாதனைகளை படைத்திருந்த போதும், அவர் மிகவும் எளிமையான மனிதராக இருந்தார்.' என்று எழுதியுள்ளார்.

மறைந்த பாடகர் SPB அவர்களது இறுதிச் சடங்குகள், அவரது பண்ணை வீட்டில், 24 துப்பாக்கி முழக்கங்களுடன், அரசு மரியாதையுடன் நடந்தன.  

பாடும் நிலா பாலு மறைந்ததிலிருந்து பலரும் அவரைப் பற்றி புகழாரம் சூட்டி வருகின்றனர். இத்தனை இதயங்களை ஒரு மனிதனால் எப்படி கவர முடிந்தது? இதற்கு அவரது காந்தக் குரல் ஒரு காரணம் என்றால், அவரது எளிமையும், இனிமையான பழகும் முறையும், ஆர்ப்பாட்டம் இல்லாத அன்பும் அனைவரையும் மதிக்கும் பண்பும் பிற காரணங்கள் என்று கூறினால் அது மிகையாகாது!!

ALSO READ: சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய SPB- வீடியோ வைரல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News