அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்: செந்திலுக்கு கத்தி குத்து.. அமுதாவுக்கு அதிர்ச்சி!!

Amudhavum Annalakshmiyum Today's Episode Update: சந்தோஷத்தில் அமுதாவுக்கு அதிர்ச்சி.. செந்திலுக்கு கத்தி குத்து - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2023, 03:29 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் எதிர்பாராத திருப்பம்.
  • மகிழ்ச்சிக்கு பின் வந்த சோகம்.
  • செந்திலுக்கு கத்தி குத்து.
அமுதாவும் அன்னலட்சுமியும் அப்டேட்: செந்திலுக்கு கத்தி குத்து.. அமுதாவுக்கு அதிர்ச்சி!! title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலுக்கென பிரத்யேக ரசிகர் பட்டாளம் உள்ளது. இதில் இன்று என்ன நடக்கவுள்ளது? எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழவுள்ளன? அத்தனையும் இங்கே தெரிந்துகொள்ளலாம். 

சீட்டு கிடைத்த சந்தோஷத்தில் செந்தில்

‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியலில் இன்றைய எபிசோடில் தேர்வில் பாஸான செந்திலுக்கு B.ED காலேஜில் சீட்டு கிடைக்க அதை சந்தோஷமாக அமுதாவுக்கு போன் செய்து சொல்கிறான். அதை கேட்ட அமுதா காதலுடன் தனக்கு மல்லிகை பூ வாங்கி வர வேண்டும் என கூறுகிறாள்.

Amudhavum Annalakshmiyum

இதனால் செந்தில் சுவீட் வாங்கிக்கொண்டு மாணிக்கத்துடன் வரும்போது, தீபாவுக்கு இந்த சந்தோஷமான விசயத்தை சொல்லி விட்டு வருகிறேன் என மாணிக்கத்தை விட்டு விட்டு கிளம்புகிறான். 

மேலும் படிக்க | கோவில் பூஜையில் ஜாஸ்மின் செய்த சம்பவம்.. மாரிக்கு ஷாக்! இன்றைய எபிசோட் அப்டேட்

செந்திலுக்கு கத்தி குத்து

அதன் பிறகு செந்தில் தீபா வீட்டுக்கு வந்து பார்க்க அங்கு வீடு பூட்டியிருக்கிறது. பிறகு செந்தில் வீட்டுக்கு சந்தோஷமாக திரும்பி வந்து கொண்டிருக்க பழனி தன் ஆட்களுடன் வந்து செந்திலிடம் சண்டையிட, அப்போது நடக்கும் சண்டையில் செந்திலை கத்தியால் குத்துகிறான். செந்தில் மயங்கி விழுகிறான். 

Amudhavum Annalakshmiyum

காத்திருக்கும் அன்னம், அமுதா

செந்தில் குத்தப்பட்டது பற்றி எதுவும் தெரியாமல் அன்னம், அமுதா இருவரும் செந்திலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Amudhavum Annalakshmiyum

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியலின் அடுத்து வரும் எபிசோடுகளை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க சீரியல்: சக்திக்கு வந்த பரிதாப நிலை.. வெற்றி கல்யாணத்தில் என்ன நடக்கும்?

மேலும் படிக்க | கனா சீரியல் அப்டேட்: தேர்தலில் ஜெயித்த அன்பரசி.. அனன்யாவுக்கு ஜானகி கொடுத்த அதிர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News