‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகம் சம்பளம் வாங்கும் அனிருத்..!

Anirudh Salary in Jawan: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத், ஜவான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jul 18, 2023, 11:26 AM IST
  • ‘ஜவான்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
  • இந்த படத்தில் அவர் வாங்கியுள்ள சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
  • ஏ.ஆர் ரஹ்மானை இந்த விஷயத்தில் அவர் மிஞ்சியுள்ளாராம்.
‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகம் சம்பளம் வாங்கும் அனிருத்..! title=

ரசிகர்களால் ‘ராக்ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் அனிருத். இவர், ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக இவர் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அனிருத்:

தனுஷ் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான ‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அனிருத். அந்த படத்திற்கு இசையமைத்த போது அவரது வயது 12. தனது முதல் படத்திலேயே தான் இசையமைத்த ‘Why This Kolaveri Di’ பாடல் மூலம் உலக அளவில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார். இன்று படங்களில் இசையமைப்பது மட்டுமன்றி, பல்வேறு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 2 கே கிட்ஸின் விருப்பமிகு இசைக்கலைஞராகவும் வலம் வருபவர் இவர். 

மேலும் படிக்க | அமலா பாலுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டதா..? பிரபல நடிகையின் தற்போதைய நிலை..!

ஜவான் படத்தில் ராக்ஸ்டார்…

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரேவாாக நடித்து வரும் படம், ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்த படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். ஜவான் படத்தில் நடித்துள்ள படக்குழுவினருக்கு தாறுமாறாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது போல, அனிருத்திற்கும் அதிக அளவிலேயே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

இசைப்புயலை மிஞ்சிய இளம் இசைக்கலைஞர்..

ரோஜா படம் மூலம் அறிமுகமாகி, ஆஸ்கர் நாயகன் என்று பெயரெடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், ஒரு படத்திற்கு 8 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது அனிருத் அவரை மிஞ்சும் வகையில், ஜவான் படத்திற்காக 10 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கயிருக்கிறாராம். இதனால் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் இசையமைப்பாளராகவும் அனிருத் உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

ஜவான் ரிலீஸ்..

பாலிவுட் ரசிகர்களும் தமிழ் ரசிகர்களும் அதிகம் எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ள ஒரு படம், ஜவான். பல்வேறு திரையுலகினர் இந்த படத்தில் இணைந்து நடித்ததுள்ளது அந்த எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். அட்லீ நீண்ட நாட்களாக இயக்கிவரும் படம் இது என்பது இன்னொரு காரணம். இவை இல்லாமல் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் இதில் இருக்கிறாரா இல்லையா என்பது படம் வெளிவந்த பிறகே தெரியவரும். ஜவான் படம், செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளவர இருக்கிறது. 

அனிருத்தின் அடுத்தடுத்த படங்கள்..

இசையமைப்பாளர் அனிருத், தற்போது இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேடல்களில் முதலாவதாக இருக்கிறார். இவர் இசையமைத்துள்ள ஜெயிலர் படம், அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘காவலா’ மற்றும் ‘ஹூக்கும்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இவர்தான் விஜய்யின் ‘லியோ’ படத்திற்கும் இசையமைப்பாளர். இந்த படத்தில் இவரது இசையில் வெளிவந்த ‘நான் ரெடிதான் வரவா..’ பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. இதையடுத்து இவரது இசையில் இந்தியன்-2 திரைப்படம் வெளிவர உள்ளது. அடுத்து அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திற்கும் இவரே இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | Jailer: ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்திற்கு சிக்கல்..! ரிலீஸ் பாதிப்பா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News