புரோமோஷன் படத்துக்கா? கே.எல்.ராகுலுக்கா? நெட்டிசன்கள் கலாய்

டடாப் (Tadap) பட புரோமோஷனுக்கு சென்ற கே.எல்.ராகுல், காதலி அதியா ஷெட்டியுடன் ஜோடியாக போஸ் கொடுத்ததை நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2021, 10:04 PM IST
 புரோமோஷன் படத்துக்கா? கே.எல்.ராகுலுக்கா? நெட்டிசன்கள் கலாய்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருக்கும் கே.எல். ராகுல், பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியைக் காதலித்து வருகிறார். அரசல்புரசலாக இந்த தகவல் வெளியானபோதும், இருவரும் பொதுவெளியில் இதுவரை ஒன்றாக தென்பட்டத்தில்லை. இங்கிலாந்து டூருக்கு இந்தியா சென்றபோதுகூட, அதியா ஷெட்டி இங்கிலாந்தில் முகாமிட்டிருந்தார். அப்போது, இருவரும் ஒன்றாக வெளியே சுற்றியதாக தகவல் பரவியது. ஆனால், இருவரும் தாங்கள் காதலிப்பதை வெளிப்படையாக கூறவில்லை. சமூகவலைதளங்களில் மட்டும் இருவரும், தங்களின் புகைப்படங்களை மாறிமாறி பகிர்ந்து வந்தனர்.

ALSO READ | ஐ.பி.எல் 2022: வீரர்கள் ஏலம் எப்போது? ஜாக்பாட் யாருக்கு அடிக்கும்?

இந்நிலையில், சுனில் ஷெட்டியின் மகன் அகான் ஷெட்டி டடாப் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட கே.எல் ராகுல், சுனில் ஷெட்டியின் மகளும், தனது காதலியுமான அதியா ஷெட்டியுடன் கூலாக போஸ் கொடுத்தார். இருவரும் பல்வேறு புகைப்படங்களுக்கு ஜோடியாக போஸ் கொடுத்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படங்களுக்கு கீழ் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், கே.எல்.ராகுல் மச்சானோட பட புரோமோஷனுக்கு சென்றாரா? இல்லை தன்னை புரோமோஷன் பண்ணிக்க போனாறா? என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

ALSO READ | என்னை தல-னு கூப்டாதீங்க- அஜித் அறிக்கை

கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் தங்களின் காதலை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், குடும்ப நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றதன் மூலம் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது உறுதியாகி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், அதியாஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டி, தனது மகன் அறிமுகமாகும் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக இருக்கிறார். படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக புரோமோஷன்களை தானே முன்னின்று செய்கிறார். சமூகவலைதளங்களிலும் Tadap படத்தை புரோமோட் செய்து வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

More Stories

Trending News