களைக்கட்ட போகும் ஆயுத பூஜை - விஜயதசமி..! ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?

Ayudha Pooja and Vijayadashami Celebration On Zee Tamil: 2 நாட்களுக்கு அதிரடி கொண்டாட்டம்.. களைக்கட்ட போகும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி - ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2024, 02:25 PM IST
களைக்கட்ட போகும் ஆயுத பூஜை - விஜயதசமி..! ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா?  title=

Zee Tamil Special Show: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

அதே நேரத்தில் பண்டிகை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக மக்களை மகிழ்விப்பதிலும் தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகியவை கொண்டாடப்பட உள்ளது. 

இதனால் இந்த இரண்டு நாட்களும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரைப்படங்கள் மூலமாக மக்களை மகிழ்விக்க உள்ளது ஜீ தமிழ். இந்த இரண்டு நாளும் என்னவென்ன நிகழ்ச்சிகள் மற்றும் என்னனென்ன சிறப்பு திரைப்படங்கள் ஒளிப்பரப்பாக உள்ளன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. 

ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள்

அதன்படி 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் " கைபேசி கொடையே கொடுமையே " என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றத்துடன் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக தொடங்க உள்ளது. 

பட்டிமன்றத்தை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ரத்னம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 

அடுத்ததாக மதியம் 12:30 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியல் 600 எபிசோடுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் கார்த்திகை தீபம் நட்சத்திரங்கள் பங்குபெறும் கார்த்திகை தீபா நட்சத்திர நவராத்திரி ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார். 

இதை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றியை பெற்ற ரகு தாத்தா என்ற புத்தம் புதிய திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள்

அக்டோபர் 12-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் " இல்லறம் சிறக்க இன்றும் காரணம் கணவனே! மனைவியே ! " என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. 

அடுத்ததாக 9:30 மணிக்கு சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற போலோ ஷங்கர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 

மேலும் மதியம் 12:30 மணிக்கு மாஸ் மாமியார் கிளாஸ் மருமகள் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உங்கள் அபிமான மாமியார் மருமகள்கள் ஜோடி சேர்ந்து பங்கேற்று கலக்க உள்ளனர். 

அடுத்து மதியம் 3:30 மணிக்கு விமல், நேஹா, அனிதா சம்பத் என பலர் இணைந்து நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற தெய்வ மச்சான் என்ற சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. எனவே வரும் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஜீ தமிழின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாட தயாராகுங்கள்.

மேலும் படிக்க - கூலி to குட் பேட் அக்லி..2025 பெரிய படங்களின் ரிலீஸ் லிஸ்ட்!!

மேலும் படிக்க - விஜய் சேதுபதியின் அண்ணா-வா இது? அச்சு அசல் அதே முகம்! வைரல் போட்டோஸ்..

மேலும் படிக்க - ஜேம்ஸ் பாண்ட் ஆக கமல்ஹாசன் வைரல் போட்டோஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News