'அவன் இவன்' திரைப்பட புகழ் நடிகர் ராமராஜ் மரணம் - அதிர்ச்சி!

அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கே.ராமராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 12, 2022, 01:11 PM IST
  • போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கே.ராமராஜ்
  • கிடா விருந்து வைத்து சத்தியம் வாங்கிய நடிகர்
  • பொதுமக்கள், திரைத்துறையினர் அஞ்சலி
'அவன் இவன்' திரைப்பட புகழ் நடிகர் ராமராஜ் மரணம் - அதிர்ச்சி! title=

இயக்குனர் பாலாவின் படமான 'அவன் இவன்' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் காமெடி மற்றும் துணை நடிகர் ராமராஜ் (வயது 72). இவரின் வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலசாக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். சினிமா துறையில் கால் பதிப்பதற்கு முன்னர் இவர் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணமான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஒரு மாத காலமாக ராம்ராஜ் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குடும்பத்தினர் இவரை உடன் இருந்து கவனித்து வந்தனர். துரதிருஷ்டவசமாகச் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் நடிகர் ராமராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

actor ramaraja,ramaraj,avan ivan,death,cinema,நடிகர் ராமராஜ் மரணம்

மறைவுக்கு பின்னர் நடிகர் ராம்ராஜின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இயக்குநர் பாலா கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - வெளியானது சூர்யா 41 ஃபர்ஸ்ட் லுக்

இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் ராம்ராஜின் வீட்டு முன்பு மக்கள் அஞ்சலி செலுத்து கூடி வருகின்றனர்.

மேலும் படிக்க | இதுதான் என்னை காப்பாற்றியது; காணாமல் 90s நடிகையின் ஓபன் ஸ்டேட்மெண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News