பிக்பாஸ்: 'Apology கேட்க முடியாது' சிபியுடன் மல்லுகட்டும் பிரியங்கா

ராஜூ மற்றும் சிபி ஆகியோர் பிக் பாஸால் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். டாஸ்க்குக்காக போட்டியாளர்களில் ஆண்கள் டவுசர் சட்டையும், பெண்கள் பாவாடை சட்டையும் அணிந்து கொள்கின்றனர். 

Written by - S.Karthikeyan | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2021, 06:33 PM IST
பிக்பாஸ்:  'Apology கேட்க முடியாது' சிபியுடன் மல்லுகட்டும் பிரியங்கா

பிக்பாஸ் வீட்டில் கனா காணும் காலங்கள் டாஸ்கில் சிபி கொடுக்கும் டாஸ்க்கை பிரியங்கா செய்ய மறுப்பதால் இருவருக்கும் மோதல் உருவாகியுள்ளது.

பிக்பாஸ் (Bigg Boss)  வீட்டில் இன்றைய நிகழ்ச்சி குறித்து வெளியாகியிருக்கும் 3 புரோமோவும் (Today Big boss Promo) காரசாரமாக உள்ளது. இந்த வார லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க்காக ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் பள்ளிப் பருவ நாட்களை நினைவுகூறும் விதமாக பள்ளிக் குழந்தைகளாக மாறுகின்றனர். 

ராஜூ மற்றும் சிபி ஆகியோர் பிக் பாஸால் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். டாஸ்க்குக்காக போட்டியாளர்களில் ஆண்கள் டவுசர் சட்டையும், பெண்கள் பாவாடை சட்டையும் அணிந்து கொள்கின்றனர். இரு நாட்களாக எதிரும் புதிருமாக இருந்த தாமரை, பிரியங்காவுக்கு மேக்கப் செய்து விடுகிறார்.

இதன்பின்னர் டாஸ்க் (Bigg Boss Task) ஆரம்பிக்கிறது. முதலில் ஜாலியாக தொடங்கும் டாஸ்க்கில் மெதுவாக விறுவிறுப்பு கூடுகிறது. டாஸ்க்கை முறையாக செய்யாமல் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியரான சிபி கடுமையான தண்டனை கொடுக்கிறார். அதில், பிரியங்கா முறையாக டாஸ்க் செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனால், சிபியின் கோபத்துக்கு ஆளாகும் பிரியங்கா, வீட்டிற்கு வெளியில் உள்ள ஷோபாவில் தண்டனை கொடுத்து அமரவைக்கப்படுகிறார். அவர் வீட்டிற்குள் செல்ல அனுமதியில்லை.

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 5: "புத்திசாலினு சொல்லி தள்ளாதிங்க" அண்ணாச்சியுடன் மோதும் அபிஷேக்

பிரியங்காவுக்காக சிபியிடம் பேசும் அபிஷேக் (Bigg Boss Abhishek) தண்டனையை முடிக்க ஒரு வழி சொல்லுமாறு கேட்டிருக்கிறார். அதற்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு உள்ளே வர சிபி சொல்கிறார். பிரியங்காவும் மன்னிப்பு கடிதம் எழுத தயாராக இருந்தாலும், பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அதனை எழுதாமல் வேறொரு தண்டனைக்கு சம்மதிக்கிறார். 

ஆனால், அந்த தண்டனை பிரியங்கா எதிர்பார்த்ததுபோல் இல்லை என்பதால் கடும் கோபமாகி, சின்ன மிஸ்டேக்கிற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என கேட்டுவிட்டு, அதனை செய்ய மறுத்துவிடுகிறார். இது சிபிக்கு (Ciby Bhuvana Chandran) எரிச்சலை ஏற்படுத்துவதால், மன்னிப்பு கடிதம் எழுதாவிட்டால் இரவானாலும் வீட்டிற்குள் வர அனுமதியில்லை, பிரியங்கா வெளியிலேயே படுத்துறங்கட்டும் என்கிறார். பிரியங்காவும் வீட்டிற்கு வெளியில் இருக்கும் ஷோபாவில் படுத்து தூங்குகிறார்.

மற்றொருபுறம், தாமரைக்கும் பிரியங்காவுக்கும் இடையே ஏற்கனவே புகைச்சல் இருக்கும் நிலையில் அபிஷேக் தன் பங்காக இடையில் புகுந்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் தண்டனை பெற்று வீட்டின் வெளியே இருக்கும் பிரியங்காவிடம் பேசும் அவர், இந்த வாரமாவது வாய்ஸ் அவுட் பண்ணு, உன்ன பத்தி தாமரை சொல்வதெல்லாம் ரொம்ப கேவலமாக இருக்கு என கூறுகிறார். 

இதனைக் கேட்டுக்கொண்ட பிரியங்கா, நான் தாமரைக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ இங்கு கேம் விளையாட வரவில்லை. எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும் எனக் கூறுகிறார். இப்படி காரசாரமாக புரோமோ இருப்பதால், இன்றைய எபிசோடு பார்ப்பதற்கு இப்போது பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக புதிய வைல்ட் கார்டு என்டிரியும் இருப்பதால், சுவாரஸ்யத்துக்கு இன்றைய பிக்பாஸ் எபிசோட்டில் (Bigg Boss Episode) பஞ்சமிருக்காது.

ALSO READ | Big Boss: ‘தம்பி யாருப்பா நீ?’ புரோமோவில் இருக்கும் அந்த நபர் யார்? நெட்டிசன்கள் புலம்பல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News