Bigg Boss 4: ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த அர்ச்சனா, shock-ல் ரசிகர்கள்

சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள் அர்ச்சனா நிகழ்ச்சியில் அன்பைக் காட்டியது நடிப்பல்ல, நிஜ வாழ்விலும் அவர் அப்படித்தான் உள்ளார் என அவரை பாராட்டி வருகின்றனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 26, 2020, 07:32 PM IST
  • பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா ட்விட்டரிலிருந்து வெளியேறினார்.
  • பல ட்ரோல்களால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால் இந்த முடிவு.
  • அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் அவரது சில செயல்களுக்காக சர்க்கைக்கு ஆளானார்.
Bigg Boss 4: ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த அர்ச்சனா, shock-ல் ரசிகர்கள்

பிக் பாஸ் தமிழின் நான்காவது சீசன் இப்போது அதன் மூன்றாவது மாதத்தில் உள்ளது. நாள் அதிகமாக அதிகமாக போட்டியாளர்களுக்கிடையேயான சண்டைகளும் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி எப்போதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். முந்தைய சீசன்களைப் போலவே இந்த முறையும் இந்த ரியாலிட்டி ஷோ ரசிகர்களிடையே வெகுவாக பேசப்பட்டு வருகிறது.

Bigg Boss Season 4-ல் இதுவரை ஒன்பது போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரேகா, வெல்முருகன், சுசித்ரா, சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, ரேகா, சனம் ஷெட்டி, அரந்தங்கி நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா ஆகியோர் இதுவரை வெளியேறியுள்ளனர்.

மீதமுள்ள போட்டியாளர்களான ஆரி, ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், சிவானி நாராயணன், கேப்ரியெல்லா சார்ல்டன், ஆஜித், சோம் சேகர், அனிதா சம்பத் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தொடர்ந்து நிகழ்ச்சியில் உள்ளனர்.

சென்ற வாரம் எலிமினேட் செய்யப்பட்ட வி.ஜே அர்ச்சனா (Archana) பற்றி தொடர்ந்து சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது. பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நான்காவது சீசனில் இரண்டாவது வாரத்தில் முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னரே அர்ச்சனா அனைவருக்கும் அறியப்பட்ட பிரபலமாக இருந்துள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் மிகவும் விவாதிக்கப்பட்ட போட்டியாளராகவும் இருந்தார்.

ALSO READ: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் - வைரலாகும் புகைபடம்!

எனினும், நிகழ்ச்சியில் அவரது சில செயல்களால், அவர் சமூக ஊடகங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டார். பிக் பாஸில் அர்ச்சனாவின் நிலைப்பாட்டிற்கு சமூக ஊடகங்களில் எதிர்மறை விளைவுகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், வியாழக்கிழமையன்று தான் சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் இருந்து விலகுவதாக கூறிய அர்ச்சனா அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சமூக ஊடகங்களிலிருந்து தனக்கு கிடைக்கும் அபரிமிதமான அன்பு, வெறுப்பு என இரண்டையும் தன்னால் கையாள முடியவில்லை என்று அவர் கூறினார்.

அர்ச்சனா, ட்விட்டரில், “அன்பு, வெறுப்பு என இரண்டாலும் நான் சோர்ந்து போயிருக்கிறேன்!! ஊகங்களைத் தீர்ப்பதில் சோர்ந்து போய்விட்டேன்!! நான் ட்விட்டரில் இருந்து வெளியெறுவதைக் கொண்டாடப்போகும் அனைவருக்கும் நான் அதிக பலத்துடன் மீண்டும் வருவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று எழுதினார்.

அவரது இரண்டு ட்வீட்டுகள் கீழே உங்கள் பார்வைக்கு:

அர்ச்சனாவின் இந்த சமீபத்திய அறிக்கை அவரது தீவிர ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சிலர் அவரது வார்த்தைகளில் ஆறுதலடைந்து வருகிறார்கள். விரைவில் ஒரு பெரிய மறுபிரவேசம் செய்ய அவருக்கு சிறந்த வாழ்த்துக்களை சிலர் தெரிவித்துள்ளனர்.

அர்ச்சனா Bigg Boss 4 நிகழ்ச்சிக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த காட்சியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட தனது பிக் பாஸ் 4 ஹவுஸ்மேட்களான அரந்தங்கி நிஷா (Arandhangi Nisha) மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

ALSO READ: பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா?... லீக்கான புகைப்படம்!

சமூக ஊடகங்களில் பல ரசிகர்கள் அர்ச்சனா நிகழ்ச்சியில் அன்பைக் காட்டியது நடிப்பல்ல, நிஜ வாழ்விலும் அவர் அப்படித்தான் உள்ளார் என அவரை பாராட்டி வருகின்றனர். சிலர், அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் மற்றும் வீட்டு வேலைகளையும் முழுமையுடன் செய்தததையும் பாராட்டுகிறார்கள்.

அர்ச்சனா Bigg Boss 4 –லிருந்து வெளியேறிய பிறகு வீட்டிலும் சூழல் வெகுவாக மாறியுள்ளது. இனி வரும் வாரங்கள் போட்டியாளர்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News