பிக் பாஸ் தமிழ் 4 அப்டேட்: ரியோவை ரவுண்டு கட்டி சண்டை போட்ட சனம்-அனிதா!

பிக் பாஸ் 4 இன் புரோமோ வெளியானது, இந்த புரோமோ வீடியோவில் ரியோ ராஜ் மற்றும் சனம் ஷெட்டி - அனிதா சம்பத் இடையே அஜீத் உடனான அழைப்புக்குப் பிறகு ஒரு வாக்குவாதம் நடக்கிறது.

Last Updated : Nov 26, 2020, 02:27 PM IST
    1. ரியோ ராஜ் மற்றும் சனம் ஷெட்டி - அனிதா சம்பத் இடையே அஜீத் உடனான அழைப்புக்குப் பிறகு ஒரு வாக்குவாதம் நடக்கிறது.
    2. பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் கால்சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது
    3. இந்த டாஸ்க் இல் கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா குருப்பை சக போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி தாக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் 4 அப்டேட்: ரியோவை ரவுண்டு கட்டி சண்டை போட்ட சனம்-அனிதா! title=

பிக் பாஸ் 4 இன் புரோமோ வெளியானது, இந்த புரோமோ வீடியோவில் ரியோ ராஜ் மற்றும் சனம் ஷெட்டி - அனிதா சம்பத் இடையே அஜீத் உடனான அழைப்புக்குப் பிறகு ஒரு வாக்குவாதம் நடக்கிறது.

விறுவிறுப்பாக நடந்து வரும் பிக் பாஸ்  (Bigg Boss Tamil நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த டாஸ்க் நேற்று முதல் தொடங்கி தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

ALSO READ | வாயை திறந்தா ஒரே கலீஜ்.....சம்யுக்தா-சனம் தாறுமாறு மோதல்!

பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் கால்சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கால்செண்டர் ஊழியர்களாக சம்யுக்தா, பாலாஜி, அனிதா, ஆஜித், ரமேஷ் மற்றும் காபி ஆகியோர் இருக்க அவர்களிடம் சக போட்டியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் கேள்விகள் கேட்பதற்கு எந்த விதமான வரைமுறையும் இல்லை என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இந்த டாஸ்க் இல் கடந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா (Archanaகுருப்பை சக போட்டியாளர்கள் ரவுண்டு கட்டி தாக்கி வருகின்றனர். பாலாஜி (Balajiஆரம்பித்து வைத்த இந்த ரவுண்டில் சிக்கிய அர்ச்சனா குருப்பில் உள்ளவர்கள் தாங்கள் குரூப் இல்லை என்று சொல்ல ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

ALSO READ | தரமான சம்பவம்! அர்ச்சனா பாலாஜி இடையே காரசாரமான வாக்குவாதம்!

இந்த நிலையில் இன்றைய கால் சென்டர் டாஸ்க்கில் ரியோ (Rio Raj) மற்றும் ஆஜித் இடையே நடந்த உரையாடலில், அனிதா-சனம் (Sanam Shettyஆகியோர்களின் நட்பை ஒரு உதாரணமாக கூறினார். இதற்காக சனமும், அனிதாவும் (Anitha Sampath) ரியோவை ரவுண்டு கட்டி வருகின்றனர். இருவரிடமும் ஒரே நேரத்தில் ரியோ மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் காட்சி தெரிகிறது இன்றைய புரோமோவில். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News