Cauvery: காவிரி மேலாண்மை வாரியம் தமிழர்களின் உரிமை -நாசர்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தில் கோரிக்கை...!

Last Updated : Apr 8, 2018, 11:57 AM IST
Cauvery: காவிரி மேலாண்மை வாரியம் தமிழர்களின் உரிமை -நாசர்!  title=

தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில்  தொடர் போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.

இதை தொடர்ந்து, விவசாய அமைப்புகள், பொது மக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் திரையுலகினர் இன்று கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த போராட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. போராட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெறும் போராட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டனர். 

இவர்களுக்கு மத்தியில் பேசிய நடிகர் நாசர்...! 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தில் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் அரசு ஒரு தீர்வு காண வேண்டும். இன்று ஒட்டுமொத்த திரையுலகம் கூடியிருப்பது இந்த இரண்டு பிரச்னைகளுக்காகதான். எனவே நாங்க இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் இன்று மெளனப் போராட்டம் நடத்துகிறோம். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டத்தை தொடங்கியது.தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன என அவர் தெரிவித்தார்..! 

Trending News