துணை நடிகை சென்னையில் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில 29 வயதான துணை நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Sep 18, 2022, 10:41 AM IST
  • சினிமா நடிகை தூக்கிட்டு தற்கொலை.
  • காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
  • போலீசார் தற்கொலை குறித்து தீவிர விசாரணை.
துணை நடிகை சென்னையில் தூக்கிட்டு தற்கொலை! title=

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா, இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி வாய்தா என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த பொழுது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

jessi

மேலும் படிக்க | ஹீலியம் வாயுவை சுவாசித்து திருமணமாகி 4 மாதமே ஆன பெண் தற்கொலை!

இதனை அடுத்து தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர் நேற்று இரவு சென்னை வந்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சமீபத்தில் வெளியான வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் மற்றும் பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.  மேலும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் இவருக்கு 100K பாலோவர்ஸ் உள்ளனர்.  கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட ஒரு ரீல் வீடியோ பதிவேற்றி உள்ளார்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதும், அது மட்டும் இன்றி அந்த கடிதத்தில் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கைக்கூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது - கமலை வறுத்தெடுக்கும் வானதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News