விஜய் கொடுத்த சர்பிரைஸால் குக்வித் கோமாளி சிவாங்கி ஹேப்பி

பீஸ்ட் படத்தின் சூட்டிங்கின்போது குக்வித் கோமாளி புகழ் சிவாங்கிக்கு விஜய் கொடுத்த சர்பிரைஸால் மகிழ்ச்சியில் உள்ளார்  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2022, 12:22 PM IST
  • விஜயை சந்தித்த சிவாங்கி
  • புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
  • டிவிட்டரில் வைரலாகும் புகைப்படம்
விஜய் கொடுத்த சர்பிரைஸால் குக்வித் கோமாளி சிவாங்கி ஹேப்பி  title=

விஜய்யின் 65வது படம் ‘பீஸ்ட்’ ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. 5 மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியாகி 2 வாரங்களைக் கடந்திருக்கும் சூழலில், இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது நடந்த சர்பிரைஸ் விஷயம் ஒன்றை குக்வித் கோமாளி புகழ் சிவாங்கி பகிர்ந்து கொண்டுள்ளார். 

மேலும் படிக்க | ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்; இருவர் கைது, நடந்தது என்ன

பீஸ்ட் வெல்கம்

பீஸ்ட் திரைப்படத்துக்கு டைட்டிலைப் போலவே மிருகத்தனமான வரவேற்பு இருந்தது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விடியவிடிய காத்திருந்து முதல் ஷோவைப் பார்த்தனர். இதில் உளவுத்துறை அதிகாரி வீர ராகவன் கதாப்பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார்.  ப்ரீத்தியாக பூஜா ஹெக்டே நடித்திருக்க, இவர்களுடன் யோகி பாபு, ரெடின்ஸ் கிங்ஸ்லி மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரும் ஃபர்மாமென்ஸ் காட்டியுள்ளனர். செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. 

படக்குழுவினருக்கு விஜயின் விருந்து

படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன நிலையில் அண்மையில் விஜய் தனது வீட்டில் படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். இயக்குனர் நெல்சன் புகைப்படத்துடன் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். இந்த விருந்தில் பூஜா ஹெக்டே, நெல்சன், விடிவி கணேஷ், நடன இயக்குனர் சதீஷ், நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தப் புகைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பலரும் பீஸ்ட் படத்தின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜயுடன் சிவாங்கி

குக் வித் கோமாளி சிவாங்கி, பீஸ்ட் படத்தின் சூட்டிங்கின்போது விஜயை நேரில் சந்தித்துள்ளார். ஜாலி ஓ ஜிம்கானா படத்தின் சூட்டிங்கில் இருந்தபோது நேரடியாக சந்தித்துள்ள அவர், அந்த புகைப்படத்தை இப்போது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். விஜய் சாரின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி, அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி எனக் கூறி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். டான் படத்தின் இயக்குநரும் விஜய்யை சந்தித்துள்ளார்.

மேலும் படிக்க | 'ஓ மை டாக்' படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News