சினிமா செய்திகள்: நாடு முழுவதும் கொரோனா தொற்று (COVID-19) அதிகரித்து வருவதால், பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை போடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,. தமிழக மாநில அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 2021 திரையரங்குகளில் ஏப்ரல் 10 முதல் மால்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் தனித்து இயங்கும் தியேட்டர்களில் 50 சதவீதம் இறக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கிய தனுஷ் (Dhanush) நடித்துள்ள "கர்ணன்" திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள உள்ளதால், திரைப்படம் திட்டமிட்டபடி படம் திரைக்கு வருமா அல்லது தயாரிப்பாளர்கள் திரைப்பட வெளியீட்டை ஒத்திவைப்பார்களா என்று சந்தேகம் எழுத்துள்ளது.
இந்தநிலையில், கர்ணன் (Karnan) படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசின் புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளுடன் கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகும். இந்த படத்திற்கு பேராதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
As promised #Karnan will arrive to theatres tomorrow. As per the need guidelines of our Govt #Karnan will be screened with 50% capacity in theatres along with proper safety measures. I kindly request everyone to provide your support for #Karnan @dhanushkraja @mari_selvaraj
— Kalaippuli S Thanu (@theVcreations) April 8, 2021
ALSO READ | மனதைக் கவரும் முதல் விமர்சனத்தை பெற்றது தனுஷின் 'கர்ணன்'
மேலும் 50 சதவீத இருக்கை அனுமதி குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் கே சுப்பிரமணியன் கூறுகையில், அனைத்து கோவிட் -19 நெறிமுறைகளையும் பின்பற்றி தியேட்டர்களை செயல்படுத்தி வரும் தியேட்டர்கள் உரிமையாளர்கள் மத்தியில் தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் முகமூடிகளை வழங்கி வருவதாகவும், ஒவ்வொரு திரையிடலுக்கு பின்னர் திரையரங்குகளை சுத்தப்படுத்துவதாகவும் கூறினார். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி என கட்டுப்பாடு விதித்திருப்பது திருப்பூர் சுப்பிரமணியனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிகிறது.
ALSO READ | நடிகர் தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியானது கர்ணன் TitleLook!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR