முடிகிறது அவதார் - ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

அவதார் படத்தினை மூன்று பாகங்களோடு முடித்துக்கொள்ளும் எண்ணம் இருப்பதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 10, 2022, 10:25 AM IST
  • அவதார் படத்துக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கின்றனர்
  • படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 16ல் ரிலீஸ்
  • 160 மொழிகளில் வெளியாகிறது
முடிகிறது அவதார் - ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்... அதிர்ச்சியில் ரசிகர்கள் title=

டைட்டானிக், தி டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். இப்படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருக்கிறது. இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை கேமரூன் தொடங்கினார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

டால்பி ப்ரீமியம் 4k உடன் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் இப்படமானது உலகம் முழுவதும், 160 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூலம் அவதார் படத்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதையும் உலகம் உணர்ந்திருக்கிறது.

Avatar

முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்த காலக்கட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்னைகள், பாதுகாப்புடன் இருப்பதற்கு அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும்  துயரங்கள் அவர்களின் வெற்றி என இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து 'அவதார்' திரைப்படம் 5 பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தினை மூன்று பாகங்களோடு முடித்துக்கொள்ளும் எண்ணம் உள்ளது. ஆனால், அது பாக்ஸ் ஆஃபீஸ் வசூலைப் பொறுத்தே இருக்கும் என்றும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐந்து பாகங்களாக வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்ட அவதார் மூன்று பாகங்களோடு முடியுமென்று கேமரூன் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலால் அவதார் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | ‘ரசிகர்களே தொந்தரவு செய்யாதீங்க’ - சிம்புவின் வேண்டுகோள்

மேலும் படிக்க | தெலுங்கு மார்க்கெட்டை குறிவைக்க சிவகார்த்திகேயன் போட்ட ஸ்கெட்ச்

மேலும் படிக்க | ஜிபி முத்துக்கு அடித்த ஜாக்பாட்; மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News