வேள்பாரியா? காவல் கோட்டமா?? இயக்குநர் சங்கருடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் , சாகித்ய அகாதெமி விருது (Sahitya academy award) பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இன்று துவங்கிய சங்கரின் படத்துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார்!!
"பிரமாண்டமான முறையில் தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்களை இயக்குவதில் இயக்குனர் சங்கருக்கு (Shankar) தனி இடம் உண்டு. என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான செட்களாகட்டும் , எண்டர்டெயின்மென்டிற்கும் எள்ளளவும் பஞ்சம் இருக்காது.இது வரையில் தமிழில் மட்டுமே தன்னுடைய படங்களை இயக்கி வந்த சங்கர் இப்போது முதல்முறையாக தெலுங்கு திரையுலகில் (Telugu cinema) கால் பதித்துள்ளார்.
ALSO READ : வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் முதல்வர் அறிவிப்பு"
அவர் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக மெகா ஸ்டார் ராம் சரண் (Ram Saran) நடிக்க உள்ளார். என்ற செய்தி வந்ததிலிருந்தே தெலுங்கு திரையுலகில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ராம் சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானி (Kiara Adwani) நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மற்றும் நடிகர் ஜெயராம் , நடிகை அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். "பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு இந்த படத்தினை தயாரிக்கிறார்.
"இந்நிலையில் படத்தின் துவக்க விழாவில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் , வேள்பாரி , காவல் கோட்டம் நூலிற்கு " சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருமான "சு வெங்கடேசன் (SU Venkatesan) படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டது ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.
"ஏனென்றால் சு.வெங்கடேசனின் நாவலான வேள்பாரியை தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு இயக்குனர்கள் படமாக எடுக்க தாங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்து வரும் இவ்வேளையில் இன்று இயக்குனர் சங்கரின் படத் துவக்க விழாவில் "வேள்பாரி நாவலுக்கு சொந்தக்காரரான சு. வெங்கடேசன் கலந்து கொண்டது வாசகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுடைய பல்ஸினை இப்போதே எகிற செய்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்! பாரியை பெரிய திரையில் காண்பதற்கு!!
ALSO READ : அதிர்ச்சி! பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி கொண்டு வந்த நாய்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR