பிரபல சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சின்னத்திரை நடியும், பிக்பாஸ் போட்டியாளருமான சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

Written by - ZEE Bureau | Last Updated : Apr 9, 2021, 09:13 AM IST
பிரபல சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை முயற்சி

அதிர்ச்சியூட்டும் நிகழ்வில், முன்னாள் பிக் பாஸ் கன்னட போட்டியாளரான சைத்ரா கோத்தூர் நேற்று (ஏப்ரல் 8) கர்நாடகாவின் கோலாரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. 

கோலார் டவுன் குருபரபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா கொட்டூர் (Chaitra Kotoor). இவர் கன்னட பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ஆவார். மேலும் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நாகர்ஜூன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நடிகை  சைத்ரா காதலிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் திருமணம் முடிந்த அன்று இரவே, நாகர்ஜூன் கோலாரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் தனக்கு நடந்த இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்பினரின் வற்புறுத்தலால் தான் சைத்ராவின் கழுத்தில் தாலி கட்டியதாகவும் கூறிய பேரில் போலீசார் சைத்ராவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தான் நாகர்ஜூனை காதலிப்பதாகவும், அவருடன் தான் செல்வேன் என்றும் கூறினார். ஆனால் நாகர்ஜூனும், அவரது குடும்பத்தினரும் சைத்ராவை ஏற்க மறுத்துவிட்டனர். 

ALSO READ | போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை

இந்நிலையில் அவரது காதல் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு (Suicide) முயன்றார். அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News