அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என பல வெற்றி படங்களை இயக்கிய தற்போது தன் மகனை கதாநாயகனாக வைத்து டக்கு முக்கு டிக்கு தாளம் என்ற படத்தை உருவாக்கி உள்ளார்.
தரமான படங்களை இயக்கிய இயக்குநர் என பெயர்பெற்ற தங்கர்பச்சான் இறுதியாக பிரபு தேவா நாயகனாக நடித்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் இவர் தற்போது தனது மகன் விஜித் பச்சனை நாயகனாக வைத்து, டக்கு முக்கு டிக்கு தாளம் என பெயரிடப்பட்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் மிலானா, அஸ்வினி ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - தங்கர் பச்சான். இசை - தரண்குமார். ஒளிப்பதிவு - பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு - சாபு ஜோசப், கலை - சக்தி செல்வராஜ், நடனம் - தினேஷ், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் - பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என முன்னணி படக்குழுவினர் படத்தின் வேலைபாடுகளில் மும்மரமாக உள்ளனர்.
Happy to release the first look of ace director @thankarbachan sir's film #TMTT.
Best wishes to his son @vijithbachan and the entire team for a great succes @dharankumar_c @MilanaNagaraj @editorsabu @AshwiniChandr10 @gopiprasannaa @silvastunt pic.twitter.com/mYTTddJSjZ— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 10, 2019
இத்திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக இதுவரை பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், தற்போது சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்கியுள்ளார்.