பாலிவுட்டை மிஞ்சும் கோலிவுட்... 1000 கோடி வசூலில் தமிழ் சினிமா..!

கொரோனா முதல் அலை முடிந்து திரையரங்கம் திறந்து இரண்டு மாதங்கள் வரையிலும் மக்கள் கூட்டம் பெரிய அளவில் வரவில்லை. விஜயின் மாஸ்டர் திரைப்படம் வந்த பின்னரே திரையரங்குள் உயிர் பெற்றது. தற்போது மீண்டும் அதே போல் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை எதிர்பார்த்தே திரையரங்கள் (Cinema Hall) காத்துக் கொண்டிருக்கின்றன. 

Written by - ZEE Bureau | Last Updated : Jul 11, 2021, 02:36 PM IST
பாலிவுட்டை மிஞ்சும் கோலிவுட்... 1000 கோடி வசூலில் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமா: கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படலாம். சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி, அல்டிமேட் ஸ்டார், சூரியா, தனுஸ், சிம்பு, கார்த்திக் உட்பட பல ஹீரோக்கள் நடித்த திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளன. இந்த வருடம் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால், தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீஸ் சுமார் 1000 கோடி வசூலை செய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் (Rajinikanth), கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் அடுத்து வெளியாகும் நிலையில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலை சற்று விலகி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.  அனைத்து தொழில்களும் முடங்கி இருந்த நிலையில் மீண்டும் வளர்ச்சி பாதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  இன்னிலையில் திரையரங்குகள் மட்டும் இன்னும் திற்காமல் இருந்து வருகிறது. இரண்டு வாரங்களில் திரையரங்குகள் (Theaters) திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா முதல் அலை முடிந்து திரையரங்கம் திறந்து இரண்டு மாதங்கள் வரையிலும் மக்கள் கூட்டம் பெரிய அளவில் வரவில்லை. விஜயின் மாஸ்டர் திரைப்படம் வந்த பின்னரே திரையரங்குள் உயிர் பெற்றது. தற்போது மீண்டும் அதே போல் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை எதிர்பார்த்தே திரையரங்கள் (Cinema Hall) காத்துக் கொண்டிருக்கின்றன. 

ALSO READ | Valimai Update: வலிமை பர்ஸ்ட் லுக்; இந்த தேதியில் வெளியீடு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் அண்ணாத்தே (Annaatthe) திரைப்படம் சூட்டிங் முடிந்த நிலையில் தீபாவளி ரிலஸ் என்று அப்படநிறுவனம் அறிவித்துள்ளது. பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டு உள்ள படம் அண்ணாத்தே. நயன்தாரா, குஸ்பு, கீர்த்தி சுரேஷ் என நடிகைகள் பட்டாளமும் இத்திரைப்படத்தின் மீதுள்ள ஆர்வத்தை துண்டுகிறது.

போனி கப்பூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith Kumar) நடிக்கும் வலிமை (Valimai) திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் படத்தை பத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வரையிலும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இருப்பினும் இந்த திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  2019ம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் ரிலிஸ் ஆகி இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  2021 தீபாவளியும் இதே போல் நடக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ALSO READ | #Thalapathy65: விஜய்யின் பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, குதூகலத்தில் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் (Thalapathy Vijay) நடிக்கும் "பீஸ்ட்" (Beast) படத்தின் சூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. விஜய்யின் பிறந்தநாள் அன்று இந்த திரைப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இப்படத்தில் விஜய் ஒரு உளவுத்துறை ஏஜெண்ட் ஆக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) நடிக்கும் விக்ரம் (Vikram) திரைப்படத்தின் பஸ்ட் லுக் இன்று வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது. நடிப்பு அரக்கர்கள் என்று கூறப்படும் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் மூன்று பேரும் ஒரே படத்தில் இருப்பதால் இந்திரப்படித்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.  நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடிப்பில் திரைப்படம் வெளியாகப்போகிறது என்று கமல் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.  இன்னும் இத்திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கப்படாத நிலையில் வெகு விரைவாக இத்திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.  இயக்குனர் லோகேஸ் விரைவாக படப்பிடிப்பை முடிப்பதில் வள்ளவர் என்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த 6 மாதத்தில் உச்ச நட்சத்திரங்கள் படங்கள் திரைக்கு வர இருப்பதால் தமிழ் சினிமாவின் வசூல் பாலிவுட்டை மிஞ்சும் என்கிறார்கள் திரைதுறை முன்னோடிகள்.

ALSO READ | துடிக்குது புஜம்! ஜெயிப்பது நிஜம்! விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News