close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

அரசியல் வசனங்களோடு வெளியானது உறியடி 2 படத்தின் டீசர்!!

விஜய் குமார் இயக்கத்தில் உறியடி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Updated: Mar 23, 2019, 01:07 PM IST
அரசியல் வசனங்களோடு வெளியானது உறியடி 2 படத்தின் டீசர்!!

விஜய் குமார் இயக்கத்தில் உறியடி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. விஜய்குமார் தயாரித்து, பின்னணி இசையமைத்து, எழுதி, இயக்கி, ஹீரோவாக அறிமுகமான இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை. என்றாலும் மானே.... மானே....(ரப்பர் இருக்க) பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவி நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

ஆனால், விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதையடுத்து, படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய்குமாரே இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா நடித்திருக்கிறார் . விஜய் சேதுபதியின் `96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பதால் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலூங்கி இருந்த நிலையில், இன்று உறியடி 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா இந்த டீசரை வெளியிட்டுள்ளார்.