திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த இளம் இசையமைப்பாளர்!

அனிருத் இசையமைத்து வரும் தர்பார் படத்தில் ஒரு பாடலை திருநங்கைகள் மூவர் பாடியுள்ளனர்.

Updated: Dec 5, 2019, 02:12 PM IST
திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த இளம் இசையமைப்பாளர்!

அனிருத் இசையமைத்து வரும் தர்பார் படத்தில் ஒரு பாடலை திருநங்கைகள் மூவர் பாடியுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.