தொடர் வசூல் வேட்டை - கோலிவுட்டின் ஆல்டைம் பெஸ்ட்டாகிறதா கமலின் விக்ரம்?

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்துக்கு 3 வாரங்களைக் கடந்தும் ரசிகர்கள் படையெடுப்பதால், இப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான இமாலய சாதனையொன்றை படைக்க உள்ளதாம்.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 19, 2022, 05:06 PM IST
  • கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் 3ஆவது வாரமாக வசூல் வேட்டை
  • இதுவரை சுமார் 370 கோடி ரூபாய் வசூலித்துள்ளது கமலின் விக்ரம்
  • ரஜினியின் 2.O கலெக்சனை கமலின் விக்ரம் முறியடிக்க வாய்ப்பு
தொடர் வசூல் வேட்டை - கோலிவுட்டின் ஆல்டைம் பெஸ்ட்டாகிறதா கமலின் விக்ரம்? title=

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் வசூலில் உலகளவில் சாதனை படைத்துவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக ரிலீஸ் ஆன இப்படம், அனைத்துப் பகுதிகளிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. 

அந்த வகையில் கமலின் சினிமா கரியரில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் மாறியுள்ளது. ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் 3ஆவது வாரத்திலும் கணிசமான பார்வையாளர்கள் வருகையைப் பெற்றுவருகிறது.வார இறுதி நாட்களில் காலை ஸ்பெஷல் ஷோக்கள்  போடும் அளவுக்கு இப்படத்துக்கான வருகை உள்ளது. 

விக்ரமைப் பொறுத்தவரை இதுவரை உலகளவில் சுமார் 370 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துள்ளதாம். இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் 400 கோடியைத் தொடவுள்ளது விக்ரம். தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் விக்ரம் மாறியுள்ளது. 

இந்நிலையில் இப்படம் இமாலய சாதனை ஒன்றைப் படைக்க உள்ளதாம். அதாவது தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக வசூல் செய்தவராக நடிகர் ரஜினி இருந்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 2.O திரைப்படம், 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

மேலும் படிக்க | தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட விஜய்.. வைரலாகும் பர்த்டே Common DP!

 

இதுவே இன்று வரை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கமலின் விக்ரம் ரஜினியின் அந்தச் சாதனையைத் தகர்க்கக்கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. அடுத்த வார இறுதியிலேயே இந்தச் சாதனையை விக்ரம் படைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரஜினியின் ஜெயிலர் போஸ்டரே காப்பியா?! நெட்டிசன்ஸிடம் சிக்கிய நெல்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News