நயன்தாரா படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவி மகளுக்கு வாய்ப்பு!

கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.

Last Updated : Dec 1, 2020, 04:11 PM IST
    1. கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கோலமாவு கோகிலா’.
    2. நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா, யோகிபாபு நடித்துள்ளனர்.
    3. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
நயன்தாரா படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவி மகளுக்கு வாய்ப்பு!

நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கோலமாவு கோகிலா’. தமிழில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 

இந்நிலையில், தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் நயன்தாரா (Nayanthara) கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் (Sri devi) மகள் ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷை 'ராஞ்சனா' (Raanjhanaa) படம் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இப்படத்தை இயக்க உள்ளார். 

Rooh-Afza': Janhvi Kapoor to play a double role in her next film?

ALSO READ | இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன்? படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்?

கோலமாவு கோகிலா (Kolamavu Kokila) படத்தின் ரீமேக் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் வருகிற ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது. தமிழைப் போலவே இந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். 

Coco | Now Showing | Book Tickets | VOX Cinemas Oman

பாலிவுட்டின் பிரபல மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது நடிப்பு வாழ்க்கையை 2017 ஆம் ஆண்டில் தொடங்கினார். ஜான்வி கபூரின் பாலிவுட் அறிமுகமான தடக், பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொகையைப் பெற்றது. தற்போது இவர் டாப் ஹீரோயின் லிஸ்ட் இல் பதிவாகி பிஸியாக நடித்து வருகிறார். 

ALSO READ | அம்பலமான உதயநிதி - நயன்தாரா இடையில் இருந்த ரகசிய உறவு..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News