மீண்டும் இணைந்த ‘ஜோ’ ஜோடி! படப்பிடிப்பு நிறைவடைந்தது..

ஜோ” திரைப்பட ஜோடி, ரியோ- மாளவிகா மனோஜ்  மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jul 26, 2024, 09:03 PM IST
  • மீண்டும் இணைந்த ஜோ பட ஜோடி
  • ரியோ ஹீரோவாக நடிக்கிறார்
  • படப்பிடிப்பு முடிந்தது
மீண்டும் இணைந்த ‘ஜோ’ ஜோடி! படப்பிடிப்பு நிறைவடைந்தது.. title=

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் ரியோராஜ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ்  ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. 

திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. 

ரியோ- மாளவிகா மனோஜ்  முதன்மைக்  கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் புகைப்படங்கள்..

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது.  S2 மீடியா சதீஷ்குமார் இப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளைக் கவனிக்கிறார். 

இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய  படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து, அசத்தியுள்ளது படக்குழு. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க | பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பெரிய கோலிவுட் ஸ்டார்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News