தனது காதலனை கரம்பிடித்த நடிகை காஜல் அகர்வால்... பிரபலங்கள் வாழ்த்து..!

மும்பை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுவரும் நடிகை காஜல் அகர்வால் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன..!

Last Updated : Oct 31, 2020, 07:06 AM IST
தனது காதலனை கரம்பிடித்த நடிகை காஜல் அகர்வால்... பிரபலங்கள் வாழ்த்து..!

மும்பை நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுவரும் நடிகை காஜல் அகர்வால் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன..!

நடிகை காஜல் அகர்வால் பேரரசு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான "பழனி" திரைப்படத்தின் மூலம் தமிழில் திரையுலகுக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர், பொம்மலாட்டம், பழனி, மோதிவிளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது, கமல்ஹாசனின் 'இந்தியன் 2'-வில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் நடித்து வந்தாலும் காஜல் அகர்வாலை முன்னணி நடிகையாக்கியது ராஜமெளலி இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'மஹதீரா' தான்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Here are more snaps of the Kaj-Kitchlug Wedding @kajalaggarwalofficial @kitchlug #divine!!! PC: @coach_sriram #kajgautkitched #KajalAggarwal #kajalagarwal #kafawa

A post shared by KAFAWA (@wekafawa) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Just Married! Actress @kajalaggarwalofficial and businessman @kitchlug tied the knot in an intimate ceremony hosted at @tajmahalmumbai. Check out list of her wedding makers below The Wedding Makers Venue: @tajmahalmumbai Bridal Stylist: @stylebyami Bride's Outfit: @anamikakhanna.in Event Designer & Planner: @thea3project Fusion Chants (Wedding): @djganesh_djg @timelessweddingsattaj #tajweddingsutra #weddingsutraexclusive #weddingsutra #kajalagarwal #kajalaggarwal #actress #celebritynews #breakingnews #celebrityweddings #indianweddings #bollywoodnews #kajalaggarwalofficial #kajgautkitched #bridallehenga #tollywood #kajalaggarwalwedding

A post shared by WeddingSutra.com (@weddingsutra) on

ALSO READ | காஜல் அகர்வாலின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்..!

இப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலிருந்து, தமிழ், தெலுங்கு ரசிகர்களின் ப்ரியமான நடிகையாக மாறினார் காஜல் அகர்வால். தற்போது இவருக்கு 35 வயது ஆகிறது. இவரது திருமணம் எப்போது என்று திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்தும் காதலர் கெளதம் கிட்சிலு குறித்தும் முதன்முறையாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை மும்பை நட்சத்திர ஹோட்டலில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக மொத்தமாக இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் சேர்த்து 50 பேர் மட்டும பங்கேற்றனர். சிவப்பு நிற ஜாரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட லெஹங்காவில் அளவான் நகைகள் அணிந்து அழகு தேவதையாய் ஜொலித்தார் மணப்பெண் காஜல் அகர்வால், மாப்பிள்ளை காஜலுக்கு பொருத்தமான வெள்ளி நிற சேர்வானியில் அட்டகாசமாய் இருக்கிறார். 

More Stories

Trending News