விரைவில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபலமான தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சில அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 29, 2022, 09:43 AM IST
  • தென்னிந்தியாவில் பிஸியான நடிகை கீர்த்தி சுரேஷ்.
  • பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.
  • விரைவில் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.
விரைவில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் படம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளைகொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இவர் பழைய நடிகை மேனகா மற்றும் மலையாள திரையுலகின் தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளாவார்.  தமிழில் இவர் விஜய், சூர்யா, விக்ரம், விக்ரம் பிரபு உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.  பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது, இந்த படம் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படிக்க | வாரிசுக்காக வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிய சிம்பு! தெறி அப்டேட்

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவரது திருமணம் பற்றிய செய்தி வெளியாவது இது முதல்முறையல்ல, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷிற்கு கேராளாவிலுள்ள மிகப்பெரிய தொழிலபதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது மற்றும் அந்த நபர் ஒரு பெரிய அரசியல் கட்சியை சார்ந்தவர் என்றும் கூறப்பட்டது.  இந்நிலையில் தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வட்டமடித்து வருகின்றது.  

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி கீர்த்தி சுரேஷின் பெற்றோர் ஏற்கனவே மணமகனை தேர்ந்தெடுத்துவிட்டதாகவும் இதற்கு அவர் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  திருமணத்தின் தொடக்கத்திற்காகவே சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் திருநெல்வேலியிலுள்ள அவர்களது பூர்விக வீட்டிற்கு சென்று உறவினர்களை சந்தித்தும், கோயில்களில் பூஜையும் நடத்தியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் திருணம் நடைபெற போவதால் கீர்த்தி படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.  இருப்பினும் கீர்த்தி குடும்பத்தினர் தரப்பிலிருந்து அவரது திருமணம் குறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராபர்ட் மாஸ்டருக்கு இவ்ளோ சம்பளமா? பிக் பாஸ் வீட்டுல அப்படி என்ன பன்னாரு?

More Stories

Trending News