குஷி திரைப்படம்: சிவா நிர்வாணா இயக்கத்தில் இன்று (செப்., 1) வெளியாகியுள்ள படம், குஷி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா விப்லவ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமந்தா, ஆராத்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். காமெடி-காதல் டிராமா பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. சரண்யா பொன்வண்ணன், பரத் ரெட்டி, ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இரண்டு நடிகர்களுக்கும் கம்-பேக் ஆக அமையுமா..?
குஷி படத்தின் நாயகன்-நாயகியான சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் சமீபத்திய படங்கள் தோல்வியில் முடிந்தன. இருவரது ரசிகர்களும் குஷி படத்தில் இவர்களின் கம்-பேக்கிற்காக காத்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக நடிகை சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படம் பெரும் தோல்வி அடைந்தது. குஷி படத்தின் பாதி படப்பிடிப்பின் போதுதான் அவர் மயேசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்டார். இவருக்காகவாவது இந்த படம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ட்விட்டர் விமர்சனம்:
குஷி படம், பிற மாநிலங்களை விட தமிழகத்தில் சிறிது தாமதமாகவே ரிலீஸானது. அமெரிக்காவில் முன்னதாகவே படம் வெளியாகி விட்டதால் அங்கிருக்கும் ரசிகர்கள் முன்னதாகவே தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு விட்டனர். அதை தொடர்ந்து சில தெலுங்கு ரசிகர்களும் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | ஒரே நாளில் 6 படங்கள் தியேட்டரில் ரிலீஸ்..! எந்த படத்தை முதலில் பார்ப்பது?
“இரண்டாம் பாதி கொஞ்சம் சொதப்பல்..”
குஷி படத்தை பார்த்த ஒரு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், இரண்டாம் பாதி மொக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Done with the show, good climax but 2nd half falls flat. could have easily trimmed 20 mins, though movie is entertaining for most of the part it lacks lacks wow scenes overall an average fare for me 2.75/5 #Kushi
— Peter (@urstrulyPeter) September 1, 2023
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நல்ல க்ளைமேக்ஸ், இரண்டாம் பாதி திருப்பங்களே இல்லாமல் உள்ளது. 20 நிமிட காட்சிகளை வெட்டியிருக்கலாம். படம், போர் அடிக்காமல் கொண்டு செல்கிறது. மொத்தத்தில் 5க்கு2.75 மார்க்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ப்ளாக் பஸ்டர்:
ஒரு சிலர் படம் பெரிதாக ஒன்றுமில்லை என்று கூற, சில விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரசிகர்கள் படத்தை ப்ளாக் பஸ்டர் என்று புகழ்ந்து வருகின்றனர்.
Completed watching #Kushi premier show at london.
One word: blockbuster
Comebackworth watching#Kushi #VijayDeverakonda #kushipremier #Samantha pic.twitter.com/vuGb1Mku6u
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டிருக்கும் இந்த ரசிகர், “இருவருக்குமான சரியான கம்-பேக் இது..” என்றும் “கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர்தான்..” குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு முறை பார்க்கலாம்..”
ஒரு ரசிகர், “படத்தை ஒரு முறை பார்க்கலாம்..” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#Kushi A Strict One-Time Watch
While First-half was below avg…second-half was decent with some good elements.#VijayDevarakonda was very good in his role and BGM is excellent.
Overall…writing could have been better and the first half requires trimming
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் பாதி சுமாருக்கும் கீழ் ரகம். இரண்டாம் பாதி ஏதோ பரவாயில்லை. விஜய் தேவரகொண்டா அவரது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னணி இசை அற்புதம். திரைக்கதை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். முதல் பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“சமந்தா அல்லாமல்..”
ஒரு ரசிகர் தெலுங்கில் விமர்சனம் தெரிவித்திருக்கிறார். அதில், அவர் சமந்தா இல்லாமல் புது முகம் யாரேனும் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
Decent movie bagundi .
Konni lag scenes unai and 2nd half long anipistadi remianuantha gud..Acting wise @TheDeverakonda @Samanthaprabhu2 super chesaru..
But sam kakunda vere fresh face untey bagundedi iddariki match kaledu asalu #Kushi https://t.co/SOaBWRGAhB
— RAJESH P (@FanChaithu) September 1, 2023
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கொஞ்சம் மெதுவான காட்சிகள் படத்தில் உள்ளன. இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் நடிப்பு நன்றாக உள்ளது. சமந்தா அல்லாமல் புது முகத்தை நடிக்க வைத்திருந்தால் குஷி படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த ஜோடி மேட்ச் ஆகாதது போல இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ