“இமானின் முன்னாள் மனைவி பொய் சொல்றாங்க..” பிரபல நடிகை பரபரப்பு பேச்சு..!

டி.இமான்-சிவகார்த்திகேயனின் பஞ்சாயத்து பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், இது குறித்து பிரபல நடிகை ஒருவர், ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Oct 20, 2023, 04:59 PM IST
  • டி.இமான் மற்றும் சிவகார்த்திகேயனுக்கிடையே என்ன நடந்தது?
  • மோனிகா ரிச்சர்ட் குறித்து பேசிய பிரபல நடிகை.
  • என்ன சொன்னார் தெரியுமா?
“இமானின் முன்னாள் மனைவி பொய் சொல்றாங்க..” பிரபல நடிகை பரபரப்பு பேச்சு..!

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருப்பது, டி.இமானும் சிவகார்த்திகேயனும்தான். சில நாட்களுக்கு முன்னதாக, டி.இமான் ஒரு பிரபல யூடியூப் தளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதிலிருந்தே ட்விட்டர் எக்ஸ், பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இவர் கொடுத்த பேட்டிதான் ட்ரெண்டிங்கிள் உள்ளது. 

Add Zee News as a Preferred Source

நல்ல நண்பர்களாக இருந்த சிவகார்த்திகேயன்-டி.இமான்:

இசையமைப்பாளர் டி.இமான், சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது பல படங்களில் அவருடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் படங்களுக்கு அவர் இசையமைத்து கொடுத்துள்ளார். ஒன்றாக பல படங்களில் பணிபுரிந்ததையும் தாண்டி, இருவரும் குடும்ப நண்பர்களாகவும் இருந்துள்ளனர். 

டி.இமான் கொடுத்த பேட்டி:

டி.இமான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து இப்போதெல்லாம் ஏன் பணிபுரிவதில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் அதை தன்னால் வெளியில் கூற முடியாது என்றும் கூறினார். இதனால், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது என்று அவர் கூறினார். 

மேலும் படிக்க | “SK ஜென்டில்மேன்” இமானின் முன்னாள் மனைவி விளக்கம் - என்ன பேசினார்?

என்ன பிரச்சனை? 

டி.இமான் இவ்வாறு கூறியதை அடுத்து, இது அவர்களின் குடும்ப பிரச்சனை என்று ரசிகர்கள் யூகித்தனர். “டி.இமானின் முன்னாள் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு வேள இருக்குமோ..” என்றெல்லாம் சிலர் கதையை அவிழ்த்து விட்டனர். இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசியுள்ளார். இது குறித்து ஒரு ஊடகத்திற்கு போன் மூலமாக நேர்காணல் கொடுத்துள்ள அவர், சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன் என்றும் அவர் தன் குடும்பத்தில் விவாகரத்து குறித்த பிரச்சனை எழுந்த போது சமாதானம் செய்து வைக்க முயற்சித்ததாகவும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் டி.இமான் பக்கம் சிவகார்த்திகேயன் நிற்காததால் அதைத்தான் இமான் “துரோகம்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். டி.இமான் பெண் எல்லாம் பார்த்துவிட்டுதான் தன்னிடம் வந்து விவாகரத்து கேட்டதாகவும் அவர் பேசியுள்ளார். 

Kutty Padmini

பிரபல நடிகை பேட்டி..

தமிழ் திரையுலகின் முன்னாள் கதாநாயகியாக இருந்தவர், குட்டி பத்மினி. இவர், இந்த விவகாரம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில், டி.இமான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்றும், இமான் குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சரட் கூறுவதெல்லாம் பொய் என்றும் குட்டி பத்மினி கூறியுள்ளார். தனக்கும் மோனிகாவிற்கும் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவுகளையும் இமான்தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஜீவனாம்ச தொகை சரியாக கொடுக்கப்படுவதாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார். இதையெல்லாம் தன் வீட்டிற்கு இமான் மற்றும் அவரது தந்தை வந்திருந்த போது பகிரந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

இமான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமிலீயா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரை தங்களின் குடும்பம்தான் இமானிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், விவாகரத்திற்கு பிறகுதான் அவர்கள் இருவரும் பழக ஆரம்பித்தாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார். 

மேலும் படிக்க | டி.இமான் பிரச்சனையால் பட வாய்ப்புகளை இழக்கும் சிவகார்த்திகேயன்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News