சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி சொன்ன பதில் இதுதான்

Jason Sanjay Movie Cast : காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சூரியிடம் நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் கதையை கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 9, 2024, 04:19 PM IST
  • விஜய் மகனின் படம்
  • சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன்.
  • ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?
சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி சொன்ன பதில் இதுதான் title=

Jason Sanjay Movie Cast : காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சூரியிடம் நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் கதையை கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜயின் மகன் சஞ்சய்: 

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தொழிலதிபரின் மகனான சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா ஷாஷா என்ற மகளும் இருக்கின்றனர். விஜய், தன் மகன் மீது அதிக பாசம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் நடித்த சில படங்களில் கூட பாடல்களில் அவரை நடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக போக்கிரி படத்தில் வரும் வசந்த முல்லை பாடலிலும்,வேட்டைக்காரன் படத்தில் வரும் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலிலும் இவர் வருவார். பார்ப்பதற்கு மினி விஜய் போலவே இருந்த இவர், தற்போது 24 வயது வாலிபராக வளர்ந்து நிற்கிறார். 

ஜேசன் சஞ்சய், சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் உள்ள திரைப்படக் கல்லூரி ஒன்று பயின்று வந்தார். சமீபத்தில் தனது படிப்பை முடித்துக் கொண்ட இவர் சொந்த ஊருக்கு திரும்பினார். இதை எடுத்து அவர் லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன் பிறகு படத்தின் கதாநாயகன் கதாநாயகி குறித்த தகவல்களோ, படப்பிடிப்பு எப்போது தொடங்க இருக்கிறது என்பது குறித்து தகவலோ தெரியவில்லை. ஆனால் இப்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க | Latest News Indraja Shankar: குட் நியூஸ் சொன்ன ரோபோ சங்கர் மகள் இந்திரஜா! “அதுக்குள்ளையா” ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

விஜய் மகனின் படத்தில் சூரி:

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வரும் சூரியிடம் ஜேசன் சஞ்சய் கதையை சொன்னதாகவும், கதையை பொறுமையாக கேட்ட சூரி, இந்த கதை மாஸ் நடிகர்களுக்கான கதை, என்னை போன்ற நடிகர்களுக்கு இது செட் ஆகாது என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் நடிக்கும் நாயகன் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய் மகனின் படத்தில் இடம் பெறுபவர்கள்: 

சஞ்சய், தனது படத்தின் ஹீரோவை தேர்ந்தெடுக்க, பல்வேறு வளர்ந்து வரும் நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் கவின், அசோக் செல்வன் உள்ளிட்டோரின் பெயர்களும் அடக்கம். இவர்களில் வாரிசு நடிகரிடம் சஞ்சய் கதை கூறியதாக குறிப்பிடுகிறது. அவர் விகரமின் மகன் துருவ் விக்ரம் ஆவார். அதேபோல் ஜேசன் சஞ்சய் இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதும் ஒரு வாரிசு நடிகைதான் என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதீ ஷங்கர் தான் அவர் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | Bigg Boss 8 Tamil New Host Replacing Kamal Haasan : பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News