Latest News Actress Namitha : தாய்மொழியின் முக்கியத்துவத்தை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு எடுத்துக் கூற வேண்டுமென நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
கோவை, சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் பங்கேற்ற நடிகை நமிதா, தனது குழந்தைகளுக்கு குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மொழியைக் கற்பித்து வருவதாகவும், தாய்மொழியின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மேற்கத்திய நாகரிகத்தை ஏற்றுக்கொள்வதோடு நம் பாரம்பரிய கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
மேலும் படிக்க | கவர்ச்சி வேடங்களில் நடிப்பாரா நமீதா? அவரே சொன்ன பதில்!
தொடர்ந்து பேசிய அவர், “பீட்சா,பர்கர் போன்ற மேற்கத்திய உணவு வகைகளை சாப்பிடும் அதே வேளையில் நம் நாட்டு உணவுகளை சாப்பிட மறக்கக்கூடாது. என் குழந்தைகளுக்கு ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளையும் கற்பிக்கிறேன். தாய்மொழியில் பேசுவதில் வெட்கப்படத் தேவையில்லை. தயக்கமின்றி தமிழை கற்கவும், பேசவும் செய்யுங்கள்” என்று கூறினார்.
“ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களை நான் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. இந்தியாவின் சூப்பர் ஹீரோ ஹனுமான் தான், அவரைத்தான் சொல்லிக் கொடுத்து வருகிறேன் என்று கூறினார். கைத்தறித் தொழிலின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். "கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் அனைவரும் கைத்தறி பொருட்களை பயன்படுத்த வேண்டும்” என்றும் நமீதா கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க | விவகாரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நமீதா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ