தளபதி 69 படத்தின் ஹீரோயின் கன்ஃபார்ம்! யார் அந்த நடிகை தெரியுமா?

Latest News Thalapathy 69 Heroine : விஜயின் அவரது 69ஆவது படத்தில் நடிக்கும் ஹீரோயின் குறித்த அவள் வெளியாகி இருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 3, 2024, 02:41 PM IST
  • தளபதி 69 அப்டேட்
  • விஜய்க்கு ஜோடி இவர்தான்
  • யார் தெரியுமா?
தளபதி 69 படத்தின் ஹீரோயின் கன்ஃபார்ம்! யார் அந்த நடிகை தெரியுமா?  title=

Latest News Thalapathy 69 Heroine : அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன், நடிகர் விஜய் கடைசியாக தனது 69 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நடிக்க இருப்பவர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இதில் நடிக்க இருக்கும் ஹீரோயின் யார் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 

தளபதி 69: 

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் டாப் ஹீரோவாக வலம் வரும் இவர், விரைவில் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக ஆரம்பிக்க அவரது சினிமா பயணம், வெகு விரைவில் முடிவடைய இருப்பதை நினைத்து ரசிகர்கள் இப்போது கவலை கொண்டு இருக்கின்றனர். 

அவர் முழு நேர அரசியல் ஈடுபடுவதற்கு முன் அவர் கடைசியாக நடிக்க இருக்கும் படம் தான் தளபதி 69. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில், படத்திற்கான பிற வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் பணிகள் துவங்குவதற்கு முன்பு, தற்போது அதற்கான லுக் டெஸ்ட்  பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

கன்ஃபார்ம் ஆன நாயகி: 

தளபதி 69 படத்தில் யார் ஹீரோயினாக நடிப்பது என்பது குறித்த தகவல் அவ்வப்போது வெளியானது. முதலில், திரிஷா உட்பட சில முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், பின்னர் அதெல்லாம் வதந்திகளாகி விட்டன. இதை அடுத்து ஹீரோயினாக நடிக்க இருப்பவர் சமந்தா என்ன பேசப்பட்டது. இதையடுத்து, இது தற்போது கன்ஃபாரம் ஆகியிருக்கிறது. ஏற்கனவே, இவர்கள் இருவரும் இணைந்து தெறி மற்றும் மெர்சல், கத்தி ஆகிய படங்களில் நடித்திருந்ததை தொடர்ந்து, தற்போது இந்த படத்திலும் அவர்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், தற்போது தளபதி 69 படத்தின் லுக் டெஸ்ட் நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, சமந்தா இதில் கலந்து கொண்டதாகவும் இதனால் அவர்தான் இதில் நடிக்க இருக்கிறார் என்பது கன்ஃபார்ம் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Thalapathy 69 : விஜய் ரசிகர்களுக்கு ஷாக்!‘தளபதி 69’ படம் டிராப்பா?!

இசை யார்? 

தளபதி 69 படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே, விஜய்யின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கத்தி, லியோ, பீஸ்ட் போன்ற படங்களுக்கு இவர் மியூசிக் பாேட்ட பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. 

Thalapathy 69

ஹெச்.வினோத்தின் இயக்கத்தில்..

இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் அஜித்தை வைத்து மட்டும் 3 படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. இதையடுத்து, இவர் முதன்முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்திருக்கிறார். இதையடுத்து, இந்த கூட்டணி எப்படியிருக்குமோ என ரசிகர்கள் சிலர் பயத்தில் இருந்தாலும், ஒரு சிலர் கொஞ்சம் உற்சாகமாக இருக்கின்றனர். 

மேலும் படிக்க | Thalapathy 69: தளபதி 69 படத்தின் ஷூட்டிங் தாெடக்கம்! எந்த மாதத்தில் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

Trending News