Cooku With Comali 5 New Anchor Replacing Manimegalai : தமிழ் ரசிகர்கள் மத்தியில், அதிக ஆதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த சண்டையால் மணிமேகலை இதிலிருந்து விளகினார். இவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் ஒருவரை களமிறக்க இருக்கிறது, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி.
மணிமேகலை-பிரியங்கா சண்டை:
யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எதை திறந்தாலும், சமீப சில நாட்களாக தொடர்ந்து காட்டப்படும் முகங்களாக இருக்கின்றனர் மணிமேகலையும் பிரியங்காவும். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்களான இவர்கள், ஒன்றாக குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுவரை கோமாளியாக வந்த மணிமேகலை இந்த முறை தொகுப்பாளராக வந்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஸ்டார் ஹோஸ்ட் ஆக இருக்கும் பிரியங்கா, இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆக களமிறங்கினார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு நடைப்பெற்ற ஷூட்டில் வாக்குவாதம் எழுந்ததாகவும், இதனால் கோபம் முற்றிப்போய் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், மணிமேகலையும் ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
இதையடுத்து, பிரியங்கா மீது பலரும் வெறுப்பு மழையை பொழிய ஆரம்பித்தனர். இது குறித்து மணிமேகலை தரப்பில் இருந்து தொடர்ந்து வீடியோக்கள் வெளியானது. பிரியங்காவிற்கு ஆதரவாக சில பிரபலங்கள் குரல் கொடுத்தாலும், மக்களுக்கு அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயம் கெட்டு விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் சேனல் புதிய ப்ரமோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், புதிதாக ஒரு ஆங்கரை களமிறக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
யார் அவர்?
புதிய தொகுப்பாளர் குறித்து வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில், யார் அந்த தொகுப்பாளர் என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால், அதில் வரும் வாய்ஸ் ஓவரில், அவர் நமக்கு தெரிந்தவராகவும் இருக்கலாம், தெரியாதவராகவும் இருக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த தொலைக்காட்சியில் ஏற்கனவே இருக்கும் ஒரு ஆங்கராக இவர் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மணிமேகலை-பிரியங்கா சண்டையில் தப்பு செய்தது யார்? குரேஷி சொன்ன விஷயம்..
என்ன பிரச்சனை:
மணிமேகலை, கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன்களில் கோமாளியாக இருந்தார். ஆனால், தனது நோக்கம் தொகுப்பாளராக இருப்பதுதான் என்றும், அதனால் இனி இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது என்றும் கூறி கடந்த சீசனில் விலகினார். மீண்டும் இவரை தொகுப்பாளராக 5வது சீசன் முதல் அழைத்தனர். பின்னர் தொகுப்பாளராக களமிறங்கிய இவர், மக்களை மகிழ்வித்து வந்தார். திடீரென இரு வாரங்களுக்கு முன்னர், தான் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த இவர் ,இதற்கு காரணம் குக் ஆக வந்த ஒரு பெண் தொகுப்பாளர்தான் என்றும், அவர் தன் வேலையை மட்டுமல்லாமல் பிறர் வேலையையும் சேர்த்து செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து தன்னால் சுய மரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரிய புயலை கிளப்பியது.
பல வருடங்களாக பிரியங்காவை பார்த்து வரும் மக்கள், எந்த வாயால் அவரை சிறந்த எண்டெர்டெயினர் என்று கூறினரோ, அதே வாயால் தகாத வார்த்தைகளில் வசைப்பாடினர். அதே சமயத்தில் மணிமேகலைக்கும் ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். மக்களின் சப்போர்ட்-ஆல் குஷியான மணிமேகலை, பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோ போடுபவர்களுக்கும், தன்னை பற்றி பேசி நேர்காணல் கொடுப்பவர்களுக்கும், தொடர்ந்து தனது யூடியூப் பக்கம் மூலம் பதிலடி கொடுத்து வந்தார். இருவருக்கும் மட்டும் இடையே இருந்த இந்த சண்டை, பின்னர் சேனலுக்கும் மணிமேகலைக்குமான சண்டையாக மாறியது. இன்னும் சில எபிசோடுகளில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி முடியவே போகிறது. ஆனாலும், இதற்கு மணிமேகலையை வெறுப்பேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனே புதிய தொகுப்பாளரை சேனல், களமிறக்குவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ