ஜிவி பிரகாஷ், சைந்தவி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது

நடிகர்- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகர் சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

Last Updated : Apr 21, 2020, 01:47 PM IST
ஜிவி பிரகாஷ், சைந்தவி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது title=

நடிகர்- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகர் சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

டி.நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சைந்தவி பிரசவித்தார். தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ஜி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Trending News