KPY பாலாவுக்கு கல்யாணமா!? அவரே கொடுத்த அப்டேட்…

KPY Bala Marriage : தமிழ் சின்னத்திரை உலகின் பிரபலமாக வலம் வரும் KPY பாலா, தனது திருமணம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : May 12, 2024, 03:52 PM IST
  • திருமணம் குறித்து பேசிய KPY பாலா
  • குக் வித் கோமாளி மூலம் பிரபலம்
  • திருமணம் குறித்து பேசியது என்ன?
KPY பாலாவுக்கு கல்யாணமா!? அவரே கொடுத்த அப்டேட்… title=

KPY Bala Marriage : வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகுகிறதோ, அதே போல, திறமையான சின்னத்திரை பிரபலங்களுக்கும் ரசிகர் கூட்டம் சேர்ந்து விடுகிறது. அப்படி, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துக்கொண்டுள்ளவர், KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தற்போது டிஜிட்டல் திரையில் அடிக்கடி பார்க்கும் முகமாக இருக்கிறார். 

சின்னத்திரையில் ஜொலிக்கும் ஸ்டார்…

தன்னிடம் யார் என்ன counter போட்டாலும் சில வினாடிகளிலேயே அதற்கு பதில் counter போட்டு அவர்களை காலி செய்வதில் வல்லவர், KPY பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் பர்ஃபாமர் ஆக இருக்கும் இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். அதில் கலந்து கொண்ட செலிப்ரிட்டிகளின் மனம் கோனாத வகையில் காமெடி செய்பவர்களுள் இவரும் ஒருவர். 2வது சீசனில் இவர் வைத்த ‘காரக்கொழம்பு கனி’ என்ற பெயர் பெரிய அளவில் பிரபலமானாது. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த நிகழ்ச்சியில் கடந்த 2 சீசன்களாக அவர் கலந்து கொள்ளவில்லை.

பாலாவை அடிக்கடி பார்த்த நிகழ்ச்சிகள், தற்பாேது அவர் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இவர் தற்பாேது யூடியூப் பக்கம் வந்து விட்டார். தனியார் சேனல்களுக்கு பிரத்யேகமாக செலிப்ரிட்டிகளை பேட்டி எடுத்து காெடுக்கிறார். அது மட்டுமன்றி, பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். தும்பா, நாய் சேகர் ரிட்டன்ஸ், லாபம், ரா ரா சரசுக்கு ராரா போன்ற சில படங்களில் துணை கதாப்பாத்திரமாக வரும் நடித்த இவர், மக்களுக்கு உதவி செய்வதையும் ஹாபியாக கொண்டிருக்கிறார். 

ஓடி ஓடி உதவும் பாலா..

நடிகர் பாலா, கடந்த சில மாதங்களாக ஏழை எளியோருக்கு உதவி செய்வதை வழக்காக கொண்டிருக்கிறார். தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்த போதும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவியருக்கு பண உதவி தேவைப்படும் போதும் அவர்களுக்காக உதவி செய்கிறார் பாலா. இவரது செயல், பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல...

நோட்டு புத்தகங்களை வழங்கினார்…!

கடலூர் அருகே உள்ள கடற்கரை ஓர கிராமமான தாழங்குடாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5000 சதுர அடி இடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் KPY பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த இடத்தை வழங்கியதுடன் அந்த பகுதி சிறுவர் - சிறுமிகளுக்கு பள்ளி நோட்டு புத்தகங்கள் மற்றும் பள்ளி புத்தகப்பையை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதற்கு முன்பு சம்பாதிப்பதை இல்லாதவர்களுக்கு செய்து வந்த நிலையில் தற்போது உதவி செய்வதற்காகவே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதாகவும், என்னால் முடிந்தவரை செய்து கொண்டே இருப்பேன் என அவர் தெரிவித்தார்.

திருமணம் குறித்து அப்டேட்…

எதிர்காலத் திட்டம் முழுவதுமே தன்னால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிவித்த அவர் உங்களுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு திடீரென இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்களே காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் என்னுடைய திருமணம் ஆனால் எப்பொழுது என்று தேதியை பின்பு அறிவிப்பேன் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை அஸ்மிதா, மஸ்காரா பாடலுக்கு நடனமாடினார்.

மேலும் படிக்க | இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News