லியோ படத்திற்கு இடையூறு செய்கிறதா ரெட் ஜெயன்ட் நிறுவனம்?

Leo Audio Launch: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 24, 2023, 01:34 PM IST
  • அக்டோபர் 19ம் வெளியாகும் லியோ படம்.
  • செப்டம்பர் 30ம் தேதி ஆடியோ லான்ச் நடைபெறுகிறது.
  • இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லியோ படத்திற்கு இடையூறு செய்கிறதா ரெட் ஜெயன்ட் நிறுவனம்? title=

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.  மாஸ்டர் படம் முடிந்த பின்பு லோகேஷ் உடன் விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றுவார் என்ற தகவல் அந்த சமயத்தில் வெளியானது, இதனை தொடர்ந்து லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தும், படத்தில் நடிப்பவர்கள் பற்றிய தகவல்கள் வந்ததிலிருந்தும் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மீது அதிக அளவில் உள்ளது. அதை பூர்த்தி செய்யும் வகையில் படத்திலிருந்து வெளியான வீடியோக்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் சிங்கிள் என அனைத்தும் தரமாக இருந்தது.

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..!

தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் ஆடியோ லான்ச் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. முன்பு மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் வேறு சில காரணங்களுக்காக அங்கு ஆடியோ லான்ச் நடைபெறவில்லை. ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் தமிழக அரசு தரப்பில் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.  

இந்நிலையில், லியோ படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயின் நிறுவனம் கேட்பதாகவும் ஆனால் லியோவின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால்தான் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை லியோ படகு குழுவினருக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை என்றும் சவுக்கு சங்கர் X தளத்தில் பதிவிட்டு இருந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளித்துள்ளது. " Sir, this is to clarify that this news is not true.." என்று பதில் அளித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது நிம்மதியாக உள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ படத்தின் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி போஸ்டர்கள் வெளியான நிலையில் அடுத்ததாக ஆடியோ லான்ச் குறித்த அப்டேட் வெளியாக உள்ளது. அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பரிவ் சண்டைக்காட்சிகளை மேற்கொண்டுள்ளனர்.  லியோ படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.  மேலும், தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், இதற்காக அமெரிக்காவில் சில டெஸ்ட் சூட் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க | மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஃபேமிலி போட்டோஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News