ஹீரோவாக கார்த்தி, வில்லனாக சூர்யா! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 20, 2023, 12:28 PM IST
  • அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோ.
  • அடுத்து ரஜினியை வைத்து இயக்க உள்ளார்.
  • அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ஹீரோவாக கார்த்தி, வில்லனாக சூர்யா! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!  title=

இந்தியாவின் மோஸ்ட் வான்டட் திரைப்படத் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய், த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'லியோ' படத்தின் வேளைகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.  நீண்ட நாட்களுக்கு பிறகு கோயம்புத்தூரில் நடந்த தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லோகேஷ், திரைப்பட இயக்குனராக தனது பயணம் குறித்து விரிவாக பேசினார். எதிர்பார்த்தது போலவே மாணவர்கள் அவரது வரவிருக்கும் அனைத்து படங்களின் அப்டேட்கள் பற்றி கேட்டனர்.  அனைவரின் கேள்விக்கும் பொறுமையாக பதில் அளித்தார் லோகேஷ் கனகராஜ். 

மேலும் படிக்க | இந்த 5 தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

MOVIE

அக்டோபர் 19-ம் தேதி 'லியோ' படம் வெளியான பிறகு தான் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.  இந்த திட்டம் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தலைவர் 171' என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் டில்லியாக கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படம் இந்த அடுத்த படத்தை முடிந்த பிறகு எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.  லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு சமீபத்தில் கைதி 2 படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் விக்ரம் படத்தில் ரோலக்ஸாக சூர்யா நடித்த கதாபாத்திரத்தை கொண்டு வர சொல்லி திரைக்கதை எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் டில்லியாக கார்த்தி குரல் கொடுத்தார். அதேபோல க்ளைமாக்ஸில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்து இருந்தனர்.  

எனவே இந்த சமீபத்திய அப்டேட்கள் மூலம், உடன்பிறப்புகள் சூர்யா மற்றும் கார்த்தி இறுதியாக ஒன்றாக நடிப்பார்கள் என்பதும், அதுவும் சிறந்த இயக்குனர் லோகேஷ் படத்தில் இருப்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'கைதி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதே ஆண்டில் ஒரு பண்டிகை தினத்தில் வெளியீட்டு தேதி திட்டமிடப்பட்டுள்ளது. கார்த்தி தற்போது இந்த ஆண்டு தீபாவளி அன்று ராஜு முருகன் இயக்கிய 'ஜப்பான்' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். மறுபுறம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூர்யா 43' படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்து ஞானவேல் ராஜாவுடன் தனது 170ஆவது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தையடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171ஆவது படத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதுவே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் ரஜினி.

மேலும் படிக்க | விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

Trending News