விஷால், மிஷ்கின் கூட்டணியில் இணைந்தார் இளையராஜா?

நடிகர் விஷால், மிஷ்கின் கூட்டணியில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Sep 10, 2019, 09:23 PM IST
விஷால், மிஷ்கின் கூட்டணியில் இணைந்தார் இளையராஜா? title=

நடிகர் விஷால், மிஷ்கின் கூட்டணியில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது ‘ஆக்சன்’ என்ற படத்தில் நடிகர் விஷால் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும், இந்த படம் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இரண்டாம் பகுதி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இன்று விஷால், விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி, மிஷ்கின் ஆகியோர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இசைஞானியும் அதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து அட்வான்ஸ் பணம் வழங்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது எனவும் கூறப்படுகிறது. முன்னதாக ‘துப்பறிவாளன்’ முதல் பாகத்தில் அரோல் கரோலி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Trending News