ஷக்தியின் தாலியை பறிக்கும் பூஜா? அடுத்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : May 5, 2023, 01:11 PM IST
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் பல ட்விஸ்ட் இருக்கின்றன.
  • பூஜாவின் கழுத்தில் சக்தி தாலி கட்டுகிறான்.
  • பூஜா, சக்தியின் தாலியை பறிக்கிறாள்.
ஷக்தியின் தாலியை பறிக்கும் பூஜா? அடுத்தது என்ன? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக இருக்கும் மீனாட்சி பொண்ணுங்க் தொடர் பல குடும்பத்தாரின் மனங்களை கவர்ந்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த மீனாட்சியின் குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியல், பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வோமா? 

இதுவரை நடந்தது..

பூஜாவின் தோழிகள், சக்தி மீது சாப்பாட்டைக் கொட்டி அவமானப்படுத்துகிறார்கள். மறுபக்கம் கல்யாணத்தை நிறுத்துவதற்காக காரில் வந்து கொண்டிருந்த நீதிமணி வந்து கொண்டிருக்கிறான். வெற்றியும் பூஜாவும் மனமேடையில் திருமணத்திற்கு ரெடியாக அமர்ந்து கொண்டிருக்க, முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டே இருக்கிறது. வெற்றி பூஜாவை திருமணம் செய்து கொண்டானா? சக்தியின் நிலை என்ன ஆனது. இதை இன்றைய எபிசோடில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | கல்யாணத்தில் காத்திருந்த அதிர்ச்சி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்!

இனி நடக்கவிருப்பது…

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கெட்டி மேளம் ஒலிக்க வெற்றி பூஜா கழுத்தில் தாலி கட்டுகிறான். தாலி ஏறியதும் பூஜா மேடையை விட்டு இறங்கி வந்து சக்தியை இனி நீ இருக்க வேண்டாம் கிளம்பி விடு என்று அவமானப்படுத்துகிறாள். 

உடனே சரளா பூஜாவிடம் இதுதான் சரியான நேரம் உன்னை அவமானப்படுத்திய சக்தியின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி விட்டு கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே துரத்து என்று சொல்ல, பூஜா சக்தியின் தாலியை பிடுங்க வர சக்தி வேண்டாம் என்று கதறுகிறாள். இதைப் பார்த்ததும் செல்வ முருகனுக்கு வலிப்பு வந்து விழுகிறார். பிறகு இது சரண்யா கண்ட கனவு என தெரிய வருகிறது.

Meenakshi Ponnunga

அமைதியாக இருக்கும் சக்தி:

கல்யாண மேடைக்கு வெற்றி வந்து அமர்கிறான். பூஜா சக்தியிடம் கல்யாண தாலியை கொண்டு போய் ஆசீர்வாதம் வாங்கி வரும்படி சொல்கிறாள். வெற்றி, சக்தியிடம் உன் ரகசியத்தை இப்பொழுது ஆவது சொல் என்று கேட்க, சக்தி அமைதியாக இருக்கிறாள். சரண்யாவும் கேட்க சக்தி அமைதியாகவே இருக்கிறாள்.

சக்தி எதையோ சொல்லி விடுவாளா என்ற பயத்தில் பூஜா ரங்கநாயகியிடம் இவள் திட்டமிட்டு ஏதோ நாடகம் நடத்துகிறாள் என்று சொல்ல ரங்கநாயகி கடைசியில் ஏன் இப்படி செய்கிறாய் மீனாட்சி பொண்ணு வார்த்தையை காப்பாற்றுவாள் என்று நினைத்தேன். ஏதோ ஒன்றை சொல்வதற்காக நீ தயாராக இருக்கிறாய் , இந்தக் கல்யாணத்தை நிறுத்தி விடாதே என்று சொல்ல சக்தி வேறு வழி இல்லாமல் எதையும் சொல்லாமல் மறைத்துக் கொண்டு தாலியை எடுத்துக்கொண்டு சென்று எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்க செல்கிறாள்.

தொடரை காண தவராதீர்கள்!

பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | SK 21: பூஜையுடன் தொடங்கிய எஸ்.கே 21 படப்பிடிப்பு..டைட்டில் இதுதானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News