ஆண்ட பரம்பரை என நான் பேசவில்லை; எடிட் செய்துள்ளனர் - அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார்.

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2025, 02:38 PM IST
  • ஆண்ட பரம்பரை என நான் பேசவில்லை.
  • அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்.
  • முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் பேட்டி.
ஆண்ட பரம்பரை என நான் பேசவில்லை; எடிட் செய்துள்ளனர் - அமைச்சர் மூர்த்தி விளக்கம்! title=

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அவனியாபுரம் திருப்பரங்குன்றம் செல்லும் சாலைகள் நடைபெற்றது. அதில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திரா ராணி பொன்வசந்தம், ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.

மேலும் படிக்க | பள்ளிகள் நாளைக்கு உண்டா... இல்லையா...? பள்ளிக்கல்வித்துறை லேட்டஸ்ட் அப்டேட்!

அப்போது அவர் பேசுகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசளிக்க விரும்புபவர்கள் பரிசளிக்கலாம். உள்ளூர் மாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எல்லாம் ஆன்லைன் தான். பரிசளிப்பதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் 3000 பேருக்கு தான் டோக்கன் கிடைக்கும், ஒன்பதாயிரம் பேருக்கு கிடைக்காது. ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த முறையும் எந்த பாகுபாடும் இருக்காது. அவனியாபுரத்தில் அனைத்து கமிட்டியும் ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்து இருந்தால் நிரந்தர வாடிவாசல் அமைப்பதற்கு அரசு தயாராக தான் உள்ளது.

மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த பிறகு அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் தனியார் நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம். கிரிக்கெட் போன்ற போட்டிகளை நடத்தி கொள்ளலாம். மாமதுரை சார்பாக வரும் 18, 19ஆம் தேதி பலூன் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. ஆண்ட பரம்பரை என பேசியது குறித்த கேள்விக்கு, அனைத்து சமுதாய மக்களுக்கும் நான் பொதுவான சொன்னது. அந்த வீடியோவை முழுமையாக பார்த்து விட்டு பேசுங்கள். நான் ஆண்ட பரம்பரை என சொன்னது ராஜராஜ சோழன் காலத்திலிருந்து மன்னர்கள் ஆட்சி செய்ததுதான் சொன்னேன்.

அதை எடிட் செய்து போட்டுள்ளனர் முழுமையாக வீடியோவை பாருங்கள், அமைச்சர் என்பவர் பொதுவான மனிதர். 1981ல் ஒரு போராட்டம் நடக்கிறது, அதில் ஒரு 5000 பேர் இறந்துள்ளனர். இது ஆங்கிலேயர்கள் கெஜட்டில் உள்ளது. அந்த வரலாறு இது மாதிரி எல்லாம் இறந்து இருக்கிறார்கள், நீங்கள் படித்து அனைத்து சமுதாயத்திற்கும் பாடுபட வேண்டும். ராஜ ராஜ சோழன் மன்னர்கள் ஆண்டது எனக் கூறியதை மட்டும் எடிட் செய்து பரப்பி வருகிறார்கள் என‌ அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் திருமண நிதியுதவி திட்டம் : யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News