மீனாட்சி பொண்ணுங்க: வெற்றியின் மாஸ்டர் பிளான்.. கைதாகும் புஷ்பா

Meenakshi Ponnunga Today's Episode Update: வெற்றியின் மாஸ்டர் பிளான்.. கைதாகும் புஷ்பா - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 9, 2023, 11:52 AM IST
  • மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
  • இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
  • மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்.
மீனாட்சி பொண்ணுங்க: வெற்றியின் மாஸ்டர் பிளான்.. கைதாகும் புஷ்பா title=

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.

மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் புஷ்பாவை வெற்றி திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்க | காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!

அதாவது பழி வாங்க நினைக்கும் வெற்றி நிஜமான வருமான வரி ரெய்டு ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறான். ரெய்டுக்கு வரப் போவது நான் தான் என்கிற தோற்றத்தையும் வெற்றி உருவாக்க அதை நம்பும் புஷ்பா, வரப் போவது வெற்றிதான் என நினைக்கிறாள். நிஜமான அதிகாரிகளை வெற்றி என நினைத்து அடித்து வெளுக்கிறாள். 

போலிஸ் புஷ்பாவை அரெஸ்ட் செய்து ஒரு நாள் முழுக்க ஜெயிலில் வைக்கிறது. புஷ்பா வெற்றியிடம், நீ ஏதோ பெருசா ப்ளான் பண்ற, நான் உன் ப்ளானை உடைக்கிறேன் என்று சபதம் செய்கிறாள்.

அடுத்ததாக சரண்யா கஷ்டப்படுவதை பார்க்கும் சக்தி சரண்யாவுக்கு பூச்சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்கிறாள். சகுந்தலா வந்தால் இந்த விழா நடக்கும் என்று ரங்கநாயகி சொல்ல, எல்லா சடங்கையும் நானே செய்தால் தான் இந்த விழா நடக்கும் என பூஜா சொல்ல, சக்தி அதை ஏற்றுக் கொள்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News